4வது சீன jilin வட கிழக்காசிய முதலீட்டு வர்த்தகப் பொருட்காட்சி அண்மையில், வட கிழக்கு சீன jilin மாநிலத்தின் தலைநகரான Changchunஇல் நடைபெற்றது. இப்பொருட்காட்சியின் போது, jilin மாநில அரசாங்கத்தின் வாரியங்கள், தொழில் முனைவோர் பிரதிநிதிகள், சீனாவிலுள்ள ஆப்பிரிக்க தூதர்கள் ஆகியோர் கலந்துகொண்ட jilin தொழில் நிறுவனங்களின் ஆப்பிரிக்காவிலான முதலீட்டு வாய்ப்பு மற்றும் நிதித் திரட்டல் வழிமுறை என்ற கருத்தரங்கு நடைபெற்றது. ஆப்பிரிக்காவிலான முதலீட்டு வளர்ச்சி வாய்ப்பில், jilin மாநிலத்தின் தொழில் நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்துகின்றன. ஆப்பிரிக்கச் சந்தையை இந்தத் தொழில் நிறுவனங்கள் முயற்சியுடன் விரிவுபடுத்தி வருகின்றன.
Jilin மாநிலம், சீன வட பகுதியின் பழைய தொழிற் துறைத் தளமாகவும், பெரிய வேளாண் மாநிலமாகவும் விளங்குகிறது. சிறந்த தொழில் மற்றும் வேளாண் துறையின் அடிப்படையும் மூலவளமும், jilin மாநிலத்தில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், jilin மாநிலத்தின் சில தொழில் முனைவோர், ஆப்பிரிக்காவில் வளர்ச்சி வாய்ப்பைத் தேடத் துவங்கியுள்ளனர். ஆப்பிரிக்கா மீதான புரிந்துணர்வை உள்ளூர் பிரதேசத்தின் தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பதை, jilin தொழில் நிறுவனங்களின் ஆப்பிரிக்காவிலான முதலீட்டு வாய்ப்பு மற்றும் நிதித் திரட்டல் வழிமுறை என்ற கருத்தரங்கு முன்னேற்றும். அதேவேளையில், ஆப்பிரிக்காவிலான நியாயமான முதலீடுகளை இந்த கருத்தரங்கு அதிகரித்துள்ளது. Jilin மாநிலத்தின் வெளியுறவு அலுவலக இயக்குனர் wanggang கூறியதாவது:
jilin தொழில் நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் முதலீடு செய்வதற்கு, jilin தொழில் நிறுவனங்களின் ஆப்பிரிக்காவிலான முதலீட்டு வாய்ப்பு மற்றும் நிதித் திரட்டல் வழிமுறை என்ற இந்த கருத்தரங்கு அனுபவங்களை வழங்கலாம் என்று அவர் கூறினார்.
1 2
|