• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-20 20:03:33    
ஆப்பிரிக்காவிலான முதலீட்டு வளர்ச்சி வாய்ப்பு

cri

2001ம் ஆண்டு முதல் இது வரை, சீன-ஆப்பிரிக்க இரு தரப்பு வர்த்தகத் தொகை, ஆண்டுதோறும் 30 விழுக்காடு அதிகரித்து வருகிறது. 2005ம் ஆண்டு, ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா மாறியுள்ளது. இது வரை, ஆப்பிரிக்காவில், 19 தொழில் நிறுவனங்களை Jilin மாநிலம் உருவாக்கி, 4 கோடி அமெரிக்க டாலர் வர்த்தகத்தை செய்துள்ளது என்று தெரிகிறது.

சூடான், எத்தியோப்பியா, ஈக்குவடோர் கினி, நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில், Jilin மாநில மின் மாற்றி சர்வதேச நிறுவனம் மின்சார அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், ஆப்பிரிக்காவிலுள்ள இந்த நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகள் மென்மேலும் நன்றாக வளர்ந்து வருகின்றன. 2007ம் ஆண்டு, ஆப்பிரிக்காவின் 4 நாடுகளில் 90 கோடி யுவானுக்கு மேலான மதிப்புள்ள பல திட்டப்பணிகளை இந்த நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க வளர்ச்சி வாய்ப்பில், இந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் zhangbin மிகுந்த ஆர்வம் கொள்கின்றார். அவர் கூறியதாவது:

தற்போது, அதிகமான வணிக வாய்ப்புகள், ஆப்பிரிக்கச் சந்தையில் காணப்படுகின்றன. எமது தொழில் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அங்கு அதிகமான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, அங்குள்ள மின்சார அடிப்படை வசதிகள் பலவீனமாக இருக்கின்றன. எனவே, மேலதிகமான வாய்ப்புகளை நாங்கள் பெறலாம் என்று அவர் கூறினார்.


1 2