ஒலிம்பிக் தலைப்பு பாடலுக்கு பரிசு

"நீயும் நானும்" என்ற பெய்ஜிங் ஒலிம்பிக் தலைப்புப் பாடல் உலக மக்கள் அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டது. ஒலிம்பிக் எழுச்சியை முழுமையாக வெளிக்கொணரும் வகையில் இப்பாடலை இயேற்றிய திரு. Chen Qigang அவர்களை பாராட்டி, சீனாவில் அமைந்துள்ள ஆடி வாகன நிறுவனம் 85,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள மகிழுந்தை அவருக்கு அன்பளிப்பாக அளித்தது. அதனை மேற்கு சீனாவில் வளர்ச்சி குன்றிய பகுதிகளில் இசை திறமைகளோடும் கனவுகளோடும் பள்ளிக்கு செல்ல முடியாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள குழந்தைகளுக்கு செலவிட, ஐநாவின் குழந்தைகள் நிதியத்தின் சீன அலுவலகத்திற்கு Chen Qigang அன்பளிப்பாக அளித்துள்ளார்.
உலகெங்கிலும் இருந்து பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழுவிடம் பதிவு செய்யப்பட்டிருந்த 98,871 பாடல்களிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற பாடல் தேர்வு மூலம் தான் திரு. Chen Qigang அவர்களின் "நீயும் நானும்" என்ற பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2008 ஆகஸ்ட் திங்கள் 8 ஆம் நாள் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மிக பிரமாண்டமான தொடக்கவிழாவின்போது, இப்பாடல் 2 பில்லியனுக்கு மேலாக மக்களால் தொலைக்காட்சி மூலம் கண்டுகளிக்கப்பட்டது. தாராளமான மனத்தோடு திரு. Chen Qigang வழங்கிய நன்கொடை மற்றும் ஆடி வாகன நிறுவனத்தின் உதவிகள் மேற்கு சீனாவிலுள்ள பத்து கிராம பிரதேசங்களில் பள்ளிக்கு செல்ல இயலாத நிலையில் உள்ள 6000 குழந்தைகளுக்கு 140 மையங்களில் இசை தொடர்பான கல்வி கற்க வழிவகுக்கும்.
1 2
|