கடந்த நூற்றாண்டின் 50ம் ஆண்டுகளின் இறுதி முதல், குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளில், நாட்டுப்புற பண்பாட்டுப் பாதுகாப்பையும் வளர்ச்சியையும் வலுப்படுத்தும் வகையில், நிதி ஒதுக்கீட்டு அளவை சீன அரசு இடைவிடாமல் அதிகரித்து வருகின்றது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சீன சமூக அறிவியல் கழகத்தின் தேசிய இன ஆய்வகத்தின் துணைத் தலைவர் Tsering Phuntsok கூறியதாவது.
நாட்டுப்புற பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்தில் சீன அரசு பெரும் கவனம் செலுத்துகிறது. எடுத்துக்காட்டாக, டன்னர் கசால் எனும் கவிதை, தேசிய சமூக அறிவியல் ஆய்வு முக்கிய திட்டப்பணியில் சேர்க்கப்பட்டது என்றார் அவர்.
கடந்த நூற்றாண்டின் 90ம் ஆண்டுகளின் துவக்கத்தில், சீன அரசின் தொடர்புடைய துறைகளின் உதவியில், 14 ஆண்டுகளில், திபெத் பண்பாட்டு வெளியீட்டகத் துறை, 38 இலட்சத்து 40 ஆயிரம் எழுத்துக்களை கொண்ட திபெத் நாட்டுப்புற கலைக்களஞ்சியங்களை இயற்றியுள்ளது. அவை, திபெத் தொகுதி--சீனக் கதைகள், திபெத் தொகுதி-- சீனப் பாடல்கள், திபெத் தொகுதி--சீனப் பழமொழிகள் ஆகியவை ஆகும். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் தலைவர் Tseten Dorje கூறியதாவது
இந்த மூன்று நூல்களும், திபெத் வரலாற்றில் முன்கண்டிராதவை. இப்பணிக்கு அதிகப்படியான நிதியை சீனா ஒதுக்கியுள்ளது என்றார் அவர். இந்த மாபெரும் பண்பாட்டு திட்டப்பணி, முந்தைய திபெத்தில், நிறைவேற்றப்பட முடியாது. Tseten Dorje கூறியதாவது
திபெத் மற்றும் hanஇன நிபுணர்கள், பெய்ஜிங் நிபுணர்கள் ஆகியோர், இந்த மூன்று நாட்டுப்புற கலைக் களஞ்சியங்களை இயற்றியுள்ளனர். 100க்கு மேலான தேசிய நிலை நிபுணர்கள், அதில் கலந்து கொண்டனர்.
1 2
|