

முந்தைய நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையில், நாட்டுப்புற பண்பாட்டு மரபுச் செல்வம், பாதுகாக்கப்பட வில்லை என்பது மட்டுமல்ல, கலைஞர்களின் தகுநிலையும் தாழ்ந்திருந்தது. அவர்கள், போதிய மதிப்பை பெற்றிருக்கவில்லை. அவர் கூறியதாவது
நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையின் போது, கலைஞர்கள், கீழ் மட்ட மனிதர்களாக இருந்தனர். நியாயமற்ற அணுகு முறையில் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். அன்றாட வாழ்க்கைக்கு பெரிதும் பாடுபாட வேண்டியிருந்தது. எங்களை போலத்தான், மற்ற நாட்டுப்புற கலைஞர்களும், வாழ்க்கை நடத்தினர். போதிய மதிப்பில்லை, தனிநபர் சுதந்திரம் இல்லை என்றார் அவர். கடந்த நூற்றாண்டு 50ம் ஆண்டுகளின் இறுதி முதல், சீன அரசு வாரியங்களின் கவனத்தில், திபெத் நாட்டுப்புற பண்பாடு, இலக்கியக் கலை என்ற தகுநிலை பெற்றது. நாட்டுப்புற கலைஞர்களின் தகுநிலையும், உயர துவங்கியது. 1 2
|