• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-27 15:39:03    
ஆப்பிரிக்காவிலான முதலீட்டு வளர்ச்சி வாய்ப்பு ஆ

cri
Jilin மாநில வணிக வாரியத்தின் புள்ளிவிபரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 7 திங்களில், Jilin மாநிலம் ஆப்பிரிக்காவுக்கு 10 கோடி அமெரிக்க டாலர் ஏற்றுமதி செய்து, 46 விழுக்காடாக அதிகரித்தது. வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், மருந்துப் பொருட்கள், ஆடை முதலியவை இதில் அடங்குகின்றன. தவிர, ஆப்பிரிக்காவின் கட்டுமானத் திட்டப் பணியில் Jilin மாநில தொழில் நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு வருகின்றன. சூடான், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில், பாலம், மின்சார மாற்று மற்றும் மின்சார நிலையக் கட்டுமானப் பணியிலும் அவை பங்கெடுத்துள்ளன.

சுறுசுறுப்பாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பணி செய்வதால், சீன முதலீட்டாளர்கள் ஆப்பிரிக்க மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்றுள்ளனர். பல ஆப்பிரிக்க நாடுகளில் சீன வணிகர்கள் முதலீடு செய்ய வரவேற்கப்பட்டு வருகின்றனர்.

சீன வட பகுதியிலுள்ள மேலதிகமான தொழில் நிறுவனங்கள், எத்தியோப்பியாவில் முதலீடு செய்வதை கவர்ந்திருப்பது என்பது இந்த முறை சீனப் பயணத்தின் நோக்கமாகும் என்று வட கிழக்காசிய முதலீட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் கலந்துகொண்ட சீனாவிலுள்ள எத்தியோப்பிய தூதர் haile-kiros gessesse செய்தியாளருக்கு பேட்டியளித்த போது கூறினார். அவர் கூறியதாவது:

மேலதிகமான சீன தொழில் நிறுவனங்கள், ஆப்பிரிக்காவில் குறிப்பாக, எத்தியோப்பியாவில் முதலீடு செய்துள்ளன. ஏனென்றால், எத்தியோப்பியாவில் வசதியான போக்குவரத்து உள்ளது. பொருட்களைப் பதனிடுதல், சுரங்கத் தொழில், தோல்பொருட்கள் ஆகிய துறைகளில் சீன தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன என்று அவர் கூறினார்.

1 2