இது வரை, 29 ஆப்பிரிக்க நாடுகளுடன் முதலீட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கைகளிலும், 9 ஆப்பிரிக்க நாடுகளுடன் இரட்டை வரி வசூலிப்பைத் தவிர்க்கும் உடன்படிக்கைகளிலும் சீனா கையொப்பமிட்டுள்ளது. இது, இரு தரப்பின் தொழில் நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்கு சிறந்த அடிப்படையை உருவாக்கியுள்ளது.
தொழில் நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் சந்தையை விரிவாக்குவதை மட்டுமல்ல, ஆப்பிரிக்க தொழில் நிறுவனங்கள் Jilin மாநிலத்துக்கு வந்து பரஸ்பரம் நலன் தரும் ஒத்துழைப்பில் ஈடுபடுவதையும் இந்த மாநிலம் ஊக்கப்படுத்துகின்றது என்று Jilin மாநிலத்தின் வணிகத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆப்பிரிக்க நாடுகளுடன் பரஸ்பரம் நலன் தரும் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை மேற்கொள்வது, Jilin மாநிலம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் உறவை நெருக்கமாக்குவது மட்டுமல்ல, சீன-ஆப்பிரிக்க மக்களின் புரிந்துணர்வு மற்றும் நட்புறவையும் ஆழமாக்கியுள்ளது. இது, இரு தரப்பின் நட்பார்ந்த உறவுக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. 1 2
|