• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-30 19:21:34    
மரம் நடுவதிலான புதிய கருத்து

cri

மரங்கள் நட்டு வளர்ப்து என்பது மனித குலம் பூமியை காக்கும் செயல்பாடுகளில் ஒரு முயற்சியாகும். ஆகவே பல்வேறு நாடுகளின் மக்கள் இதில் மிக கவனம் செலுத்தியுள்ளனர். குறிப்பாக சீனாவின் மரம் நடும் துறையின் வளர்ச்சி பற்றி இந்திய நேயர் சிறுநாயக்கன்பட்டி கே வேலுச்சாமி அக்கறை கொண்ட கேள்வி பலவற்றை முன்வைத்துள்ளார். அவருடைய ஆர்வத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன் சீனாவில் தற்போதைய மரம் நடும் சூழ்நிலையை இந்நிகழ்ச்சி வழியாக கேட்டறிய உங்களை அழைக்கின்றோம்.

வெறுமனே மரம் நடுவது வீணானது. பொருளாதாரப் பயன் மிக்க நோக்கத்துடன் இந்த துறையில் ஈடுபடுவது விவேகமானது. சீன விவசாயிகள் அத்தகைய நோக்கத்துடன் தான் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். சீனாவின் சின் மிங் புறநகரில் வளர்கின்ற ஆப்பிள் மரங்கள் மக்களின் கண்களின் முன்னால் காட்சியளிக்கின்றன. கொத்தான பழங்களோடு அமோக அறுவடைக் காட்சியை கண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் வுவான் பௌ லியாங் நமது செய்தியாளரிடம் உற்சாகத்துடன் அறிமுகப்படுத்தினார். எங்கள் வட்டத்தில் வளர்கின்ற பத்தாயிரம் மு பரப்பளவிலான ஆப்பிள் மரங்கள் விவசாயிகளின் பச்சை நிற வங்கியாக கருதப்படுகின்றன. நிலத்தில் வளர்கின்ற ஆப்பிள் மரங்கள் பக்குவமடைந்து பழம் காய்க்கும் காலமாகியுள்ளது. ஒவ்வொரு மூவின் பொருளாதாரப் பயனும் 300 ரம்மின் பி யுவானை எட்டும். ஆகவே மரம் நடுதல் மூலம் விவசாயிகள் ஆப்பிள் பழம் உட்கொள்வது மட்டுமல்ல முக்கியமான பொருளாதார நன்மையும் பெற்றுள்ளனர். மரம் நடுதல் மூலம் சுற்றுச் சூழல் சீரடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கை தரமும் மேம்பட்டுள்ளது என்று செயலாளர் வுவான் பௌ லியாங் சிரித்துக் கொண்டே விவரித்தார்.

சீனாவின் சின் மிங் நகரவாசிகளின் மரங்கள் நடும் முயற்சி என்பது பொருளாதார நோக்கிலான வனக் காட்டை உருவாக்கி, வேளாண் உற்பத்தியின் கட்டமைப்பை சரிப்படுத்தி, தங்கள் வறுமை நிலையை ஒழித்து செழுமையடையும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான முக்கிய நடவடிக்கையாகும். இதுவே புதிய ரக கிராமத்தைக் கட்டியமைப்பதற்கான நடவடிக்கையும் ஆகும். சின் மிங் வட்ட தலைமை பீடம் உள்ளூர் நிலமைக்கேற்ப gong zhu tun, dong she shan முதலிய வட்டங்களில் ஸச்சோ பேரி草莓 பழங்மரங்கள் நட ஏற்பாடு செய்தன. சிங் கிராமம், zhou tuo zhi முதலிய வட்டங்களில் 150 ஹெக்டர் நிலபரப்பில் குளிரைத் தாங்கும் ஆப்பிள் மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. San dao gang வட்டத்தில் சுமார் பத்தாயிரம் மூ நிலபரப்பில் வூ வெய்சி என்னும் மூலிகை தாவரம் பயிரிடப்பட்டுள்ளது. பொருளாதார நோக்கிலான மரம் பயிரிடும் தொழிலை வளர்க்கவும் பயன் பெறுவதை அதிகமாக்கவும் சின் மிங் நகர அரசு அறிவியல் தொழில் நுட்ப வல்லுனர்களை அழைத்து சங்கம் போன்ற அமைப்பை நிறுவியுள்ளது. 2007ம் ஆண்டு சின் மிங் நகரின் குளிர் தாங்கும் ஆப்பிள் தொழில் பொருளாதாரச் சங்கம் நிறுவப்பட்டது முதலில் மரம் நடும் விவசாயிகளுக்கு தொழில் நுட்பப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. பொருள் விநியோகம், பழங்களைக் கொள்வனவு செய்வது உள்ளிட்ட சேவைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சேமிப்பு நிர்வாக முறைமையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முறை மூலம் விவசாயிகளின் உற்பத்தி திறனும் நிலைமையும் அறியப்பட்டுள்ளது. தற்போது இந்த சங்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50க்கும் மேலாகும். குளிர் தாங்கும் ஆப்பிள் மரங்கள் பயிரிடப்படும் நிலபரப்பு 5500 மூக்களாகும்.

1 2