மரம் நடுதல் என்பது சீன மக்களின் விடயம் மட்டுமல்ல. உலக மக்களும் இதை ஏற்றுக் கொண்டு இயற்கைக்கு நன்மை அமைய வேண்டும் என்று பொதுவாக கருதப்படுகின்றனது. ஆகவே சிங்கப்பூரில் 2007ம் ஆண்டு மரம் நடுவது தொடர்பான புதிய திட்டம் விளம்பர படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒருவர் ஆண்டுக்கு 200 சிங்கப்பூர் டாலர் செலுத்தினால் அவர் ஒவ்வொரு திங்களின் இறுதி ஞாயிற்றுக் கிழமையிலும் உலக சூழல் பாதுகாப்பு நாளிலும் குறிப்பிட்ட பூங்காவில் அல்லது இயற்கை பாதுகாப்பு பிரதேசத்தில் மரச் செடிகளை நட முடியும். அவர் செலுத்திய தொகை பூங்கா நகருக்கான நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டு மேலும் கூடுதலான மரங்களை வாங்குவதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிம் பயன்படுத்தப்படும். மரம் நடுவதில் ஈடுபடுவோர் அதிகார வட்டாரத்தால் விநியோகிக்கப்படும் நிழற்படத்தோடு கூடிய அடையாள அட்டை பெறலாம். சீனாவின் ஷாங்காய் மாநகரில் நகரவாசிகள் வாழும் இடங்களில் பச்சைமயமாக்க துறையில் பங்கு ஆற்ற ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். மக்களின் சுயவிருப்பத்துடன் இந்த துறையில் பங்கு ஆற்றும் சூழ்நிலை பக்குவமடைந்த வேளையில் சீன அரசின் வன ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் chao qing yao நாட்டின் காடு வளர்ப்புத் துறைக்கு ஒவ்வொருவரும் 20 யுவான் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று முன்மொழிந்த போது, பொதுவாக எதிர்ப்பு தான் மறுமொழியாக எழுப்பப்பட்டது. வன ஆணையம் நாளாந்த நிர்வாகத்திலிருந்து மக்கள் செலுத்துகின்ற வரி வருமானத்திலிருந்து நிதி பெற்றுள்ளது. மரம் நடும் வகையில் மீண்டும் நிதி தொகையை செலுத்துவதற்கு காரணிகள் ஏதும் கிடைக்காது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பச்சைமயமாக்க எண்ணம் ஆகியவற்றை உயர்த்தும் பொருட்டு அதிகார வட்டாரம் இதர வழி முறைகளை மேற்கொள்ளலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மரம் நடும் முயற்சி தன்னார்வம் மூலம் பொது மக்களால் முன்னெடுக்கப்படலாம் என்றுள்ளனர். அரசு கட்டாயப்படுத்துவது இப்போது நடைமுறைப்படுத்த முடியாது. மரம் நட்டு வளர்ப்பது என்பதன் முக்கியத்துவம் நடைமுறையை விட ஆழமானது. மரம் நடுவதில் 200 சிங்கப்பூர் டாலர் பயன்படுத்துவதில் இன்னல் ஏதும் இல்லை. ஆனால் 20 யுவான் செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டால் மக்கள் விரும்பாதது தான் இயல்பாக உள்ளது.
மரம் நடும் முயற்சி பற்றி பேசும் போது ஒருவரை நாங்கள் மறக்கக் முடியாது. அவருக்கு வயது 70க்கு மேலாகும். அவரின் ஊர் சீனாவின் உள் மங்கோலியாவை சேர்ந்த ஹை சான் கிராமமாகும். சாதாரண விவசாயி 20 ஆண்டுகளில் மக்களால் எண்ண முடியாத பல்வகை இன்னல்களை சமாளித்து, 3000 தேவதாரு மரங்களை நட்டு வளர்த்தார். 20 ஆண்டு கால முயற்சியை அவர் மரம் நட்டு வளர்த்து சமூகத்திற்கு அர்பணித்தார். முன்பு மரம் வளராத மலையில் இப்போது மரங்கள் நிறைவாக வளர்ந்த பசுமை மயமலையாக மக்களின் கண்களின் முன்னால் உள்ளது. இது போன்ற உதாரணங்கள் சீனாவில் அதிகமாக உள்ளன. இது தான் சாதாரண மக்கள் சுற்று சூழல் பாதுகாப்புக்கு அர்பணித்த பங்காகும். சரி நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம் ஆகிவிட்டது. மரம் நடுவதிலான சீன மக்களிடையிலான புதிய கருத்து என்பது பற்றி கேட்டீர்கள். அடுத்த திங்கள் சனிக் கிழமையில் மீண்டும் சந்திப்போம். 1 2
|