பறவைக்கூடு வடிவில் வெள்ளி மணிக்கல்


பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற மிக முக்கிய அரங்கான பறவை கூடு, பெய்ஜிங் மற்றும் சீனாவின் மிக முக்கிய அடையாளமாக மட்டுமல்ல, உலக அடையாளமாகவும் திகழ்கிறது. அதன் கலைஅம்சங்களோடு கூடிய வடிவமைப்பு தொழில்நுட்ப ரீதியில் மிகவும் புகழப்படுகிறது. இந்நிலையில் இதே வடிவமைப்புடைய வெள்ளி மணிக்கல் ஒன்று வடமேற்கு சீனாவிலுள்ள Ningxia Hui இன தன்னாட்சி பிரதேச தலைநகர் Yinchuan னில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4 சென்டி மீட்டர் நீளமும், 2 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட தனிசிறப்புமிக்க இந்த வெள்ளி மணிக்கல் பார்ப்பதற்கு சீனாவின் தேசிய அரங்கான பறவை கூட்டை போலவே இருக்கின்றது.
1 2
|