விலங்குகளுக்கு திருமணம்

விலங்குகளுக்கு சிறைவாசம் போலிருந்த விலங்கு காட்சித் தலங்கள் இன்று உயிரியல் பூங்காக்களாக பராமரிக்கப்படுகின்றன. அதாவது வன விலங்குகள் காட்டில் வாழ்வது போன்ற இயற்கைச்சூழலோடும், வசதிகளோடும் வாழ ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுகின்றன. இத்தகைய உயிரியல் பூங்காக்களை சென்று பார்த்து மகிழ்கின்ற மக்கள் கூட்டம் ஒப்பீட்டளவில் குறைவு தான். எனவே தங்களுடைய உயிரியல் பூங்காவிற்கு அதிக மக்களை கவர வேண்டும் என்ற எண்ணத்துடன் சீனாவின் Zhejiang மாநிலத்திலுள்ள Wenling உயிரியல் பூங்காவில் வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்தனர். அங்குள்ள விலங்குகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது தான் அந்த ஏற்பாடு. விலங்குகளுக்கான வியப்பான திருமண நிகழ்ச்சியை வைத்து அதிக மக்களை ஈர்ப்பதே அவர்களின் எண்ணமாகும். அதன்படி 7 வயதுடைய Wukong என்ற ஆண் குரங்குக்கும், 6 வயதுடைய Xiaoya என்ற பெண் குரங்கிற்கும் மற்றும் ஆண் மற்றும் பெண் கரடிகளுக்கும் செப்டம்பர் நான்காம் நாள் திருமணம் செய்து வைக்கப்பட்டது. உயிரியல் பூங்காவில் திருமண உடைகளோடு சுற்றி வந்த அவ்விலங்குகளை பார்த்த அனைவரும் வியப்படைந்தனர். திருமணம் செய்து வைத்த துணையை தனக்கு பிடிக்கவில்லை என்று இந்த விலங்குகள் முறையிடாமல் இருந்தால் சரி. 1 2
|