• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-31 19:35:20    
திபெத் நாட்டுப்புற பண்பாட்டு ஆ

cri

நாட்டுப்புற கலைஞர்களின் தகுநிலை, மாறியது. அவர்கள், உண்மையாக விடுதலை பெற்றனர். இப்போது, அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினராக அவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். ஊதியம் அணுகு முறை முதலியவற்றில், நல்ல நிலைமை ஏற்பட்டுள்ளது. இது மாபெரும் மாற்றமாகும்.

திபெத் நாட்டுப்புற பண்பாட்டுப் பாதுகாப்பில் ஈடுபட்ட சிறப்பு துறை பணியாளர்களையும் பொழுதுபோக்குக் கலைஞர்களையும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நாட்டுப்புற கலைஞர் சங்கம், ஒன்று திரட்டியது. Tseten Dorje கூறியதாவது

இச்சங்கத்தில் 200க்கு மேலான உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டிலும், அவர்களின் படைப்புகள் வெளியிடப்பட்டன. அவை, திபெத் மொழி மற்றும் han மொழியில் நாட்டுப்புற இலக்கியம், கலை முதலிய பல துறைகளுடன் தொடர்புடையவை என்றார் அவர். கடந்த பல ஆண்டுகளில், நடுவன் அரசின் பேராதரவில், திபெத் நாட்டுப்புற கலைஞர் சங்கம், திபெத் பாரம்பரிய பண்பாட்டுப் பாதுகாப்பில் அதிகப்படியான பணிகளை மேற்கொண்டது. தலாய்லாமா குழுவின் திபெத் பண்பாட்டு அழிவு கருத்தை அது,ஆணித்தரமாக மறுத்துரைத்தது. Tseten Dorje கூறியதாவது

கடந்த காலத்தில் திபெத் பண்பாடு வளர்க்க முடியாத நிலை இருந்தது. தலாய்லாமா குழு, பிரிவினைவாதிகள் ஆகியோர், திபெத் பண்பாட்டு சீரழிக்கப்படுவதாக குற்றம் கூறினர். ஆனால், அவை வீண்பேச்சு வெற்று குற்றச்சாட்டாகும். வசைமொழியாகும். அக்கூற்றுக்களை கண்டு, நாம், மிகுந்த கோபம் அடைகிறோம். நாம் பெற்ற சாதனைகள், உண்மையானவை.

1 2