பதக்கங்கள்

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பதக்கங்கள் பி எனும் பண்டைய வெள்ளிமணிக்கல்லின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. டிராகன் உருவ வடிவங்கள் பொறிக்கப்பட்ட அந்த பி எனும் வெள்ளிமணிக்கல்லின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தங்கப்பதக்கங்கள் சீனப் பாரம்பரிய மதிப்பீடுகளான நன்னெறி, நன்மதிப்பு ஆகியவற்றை அடையாளப்படுத்துகின்றன. பொதுவாக சீன மக்கள் ஜேட் எனும் வெள்ளிமணிக்கல்லை பெரிதும் போற்றி மதிக்கக் காரணம் அதன் அழகுக்காக மட்டும் அல்ல. அதன் பண்பாடு, உள்ளார்ந்த பொருள் முதலியவற்றுக்காவும்தான். கன்ஃபியூசியஸ் அவர்கள் இந்த வெள்ளிமணிக்கல்லில் 11 மதிப்பீடுகள் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஜேட் எனும் வெள்ளிமணிக்கல், அழகு, தூய்மை, அருள் முதலியவற்றை அடையாளப்படுத்துகின்றன. பல சீன சொல்லடைகள், பழமொழிகளில் கூட அழகான பொருட்களையும். மக்களையும் குறிக்க வெள்ளிமணிக்கல்லின் பயன்பாடு இருப்பதை காணமுடியும். 1 2 3
|