 13 வது ஊனமுற்றோர் அதாவது மாற்றுதிறனுடையோரின் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உடலில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்க என்பதனை இந்த வீரர்களும் வீராங்கனைகளும் தங்களது சாதனைகள் மூலம் உலகிற்கே உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். வெற்றிபெறுவது மட்டும் எங்கள் குறிக்கோள் அல்ல. இந்த உலக விளையாட்டு விழாவில் இணைந்து மகிழ்ந்து பங்கேற்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகின்றோம் என்று நிரூபித்து கொண்டிருக்கிறார்கள். சாதாரண மனிதர்களை விட இவர்கள் மாற்றுதிறன் கொண்டவர்கள் என்பதில் ஐயமில்லை தான். இந்நிலையில் நமது உடலில் அமைகின்ற புலனறிவு தொடர்புடைய அறிவியல் ஆய்வு ஒன்று உங்களுக்காக.
உடல், வாய், கண், காது, மூக்கு ஆகிய ஐம்புலன்களால் நாம் உலகை அறிய வருகிறோம். உடல் உணர்கிறது. வாய் சுவைக்கிறது. கண் பார்க்கிறது. காது கேட்கிறது. மூக்கு நுகர்கிறது. எனவே உணர்தல், சுவைத்தல், பார்த்தல், கேட்டல், நுகர்தல் ஆகியவற்றால் நாம் இவ்வுலகை இரசித்து போற்றிக்கொண்டிருக்கிறோம். இந்த ஐம்புலன்களில் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ இழந்தவர்கள் எப்படி தங்கள் வாழ்வில் செயல்படுகிறார்கள் என்பதை நமது அன்றாட வாழ்வில் பார்த்திருப்போம். பார்வையற்றவர், தான் துணையாக கொண்டு செல்லும் ஊன்றுகோல் மூலம் கரடுமுரடான இடங்களிலும் தடுமாறாமல் நடப்பார். ஆனால் இரண்டு கண்களும் நன்றாக தெரிந்தாலும் சிலர் தட்டுதடுமாறி, விழுந்து, எழுந்து செல்வதை பார்த்திருப்போம். இது எப்படி நடக்கிறது? பார்வையற்றவர் எவ்வாறு இவ்வளவு செவ்வனே நடந்து செல்ல முடிகிறது என எண்ணி சிலவேளைகளில் நாம் வியந்திருக்கலாம்.
1 2
|