• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-10 18:58:36    
ஒலியை பார்க்கலாமா? – பகுதி I

cri

ஏதாவது புலன்களை இழந்திருப்போர் தங்களிடம் உள்ள புலனறிவில் குறிப்பாக ஒன்றில் சிறப்பான அதிக ஆற்றல் கொண்டவர்களாக இருப்பர். இவ்வாறு புலன்களின் ஒரு பகுதியில் இழந்துள்ள ஆற்றலை இன்னொன்று ஈடு செய்வதாக அமையும். இது இயற்கையாக அமையக்கூடியது. எல்லா புலன்களையும் கொண்டவர்களிடத்திலும் இத்தகைய நிலை நிகழக்கூடியதே என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது மனிதனின் பார்வைக்கு உதவும் மண்டலம் ஒலியைக்கூட பார்ப்பதற்குரிய கருவியாக பயன்படுத்த முடியும் என்பதை உறுதிபடுத்தியுள்ளனர். நம்முடைய ஐம்புலன்கள், அனைத்தையும் அறியும் ஆற்றலை நமக்கு தந்தாலும் அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக தான் செயல்படுகின்றன. ஒவ்வொன்றின் செயல்பாடுகளையும் மூளை நமக்கு இணைத்து அனுபவ உணர்வுகளாக கொடுக்கும் வலிமை பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக நம்மிடம் உள்ள செவி மற்றும் பார்வை மண்டலங்கள் தனித்தனியாக செயல்படுகின்றன. ஒலியை உணரக்கூடிய செவி மண்டலம் செயல்படும்போது பார்வை மண்டலம் அவ்விடத்தில் தனது கவனத்தை செலுத்துகிறது. இவை இரண்டாலும் பெறப்படுகின்ற தகவல்கள் சந்திப்பதேயில்லை. ஆனால் மூளையின் உயர்வான இணைப்பு ஒன்றுதான் தனித்தனியாக உள்ள இவ்விரு தகவல்களையும் இணைத்து திரைபோன்று விரியும் அனுபவத்தை நமக்கு தருகிறது.

சிறு குழந்தைகள் எழுத கற்றுக்கொள்ளும்போது, எழுத்துகளை தலைகீழாக எழுதுவதை பார்த்திருப்போம். குழந்தை அப்படி தான் பார்க்கிறது. அது பார்ப்பதை மூளை செல்லுவதுபோல தலைகீழாக எழுத முற்படுகிறது. குழந்தைகள் மட்டுமல்ல நாமனைவரும் கூட எல்லாவற்றையும் தலைகீழாக தான் பார்க்கிறோம். ஆனால் சிறு வயதிலிருந்தே அதனை நேராக எடுத்து புரிந்து கொள்ளும் தன்மையை நம்மையறியாமலேயே வளர்த்து கொள்கிறோம். உண்மையில் கண்ணால் பார்க்கப்படுகின்ற பொருளின் நிழல் அல்லது பிம்பம் தலைகீழாக தான் விழுகிறது. அவ்வாறு பதிவாகக்கூடிய பிம்பத்தை நேராக புரிந்துகொள்ளும் விதமாக நமது மூளை தகவல் அனுப்புகிறது. இந்த நிலையில் மூளை நினைத்தால் காதால் கேட்கும் ஒலியை பார்ப்பதற்கும், கண்ணால் காணும் ஒளியை கேட்பதற்கும் பயன்படுத்திவிட முடியும் என்று உயிரின மருத்துவ மையத்தின் நரம்பியல் இதழில் வெளியான ஓர் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.


1 2