• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-17 18:35:46    
பெய்ஜிங் Zhong Guan Cun தொழில்நுட்பத் தோட்டத்தின் தற்சார்பு புத்தாக்கம்

cri

பெய்ஜிங் zhong guan cun தொழில்நுட்பத் தோட்டத்தில், சுமார் 20 ஆயிரம் உயர் தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்கள் கூடின. கடந்த சில ஆண்டுகளாக, அவை தற்சார்ப்புப் புத்தாக்கம் மூலம், அதிக புதிய உற்பத்தைப் பொருட்களையும் தொழில்நுட்பங்களையும் அவை ஆராய்ந்தன. அவற்றில் பல, சர்வதேச முன்னேறிய நிலையை எட்டி, உள்நாட்டு சந்தையில் பெரிய பங்கு வகித்தன. இன்றைய நிகழ்ச்சியில் இத்தொழில் நிறுவனங்கள் பற்றி கூறுகிறோம்.

zhong guan cun தொழில்நுட்பத் தோட்டம், சீனாவின் புத்தாக்கப் பிரதேசத்தின் மிக சுறுசுறுப்பான பிரதேசமாகும். Lenovo,sohu முதலிய புகழ் பெற்ற தொழில் நிறுவனங்கள், இங்கிலிருநுந்து உலகில் அறியப்பட்டன.

IGRS Engineering Lab என்ற தகவல் தொழில் நுட்பக் குழுமம், சீனாவின் 100 புதாக்கத் தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். 2005ம் ஆண்டு, சீனாவின் எட்டு கணினி மற்றும் வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனத் தொழில் நிறுவனங்கள் இக்குழுமத்தில் சேர்ந்தன. அவர்கள், தகவல் பகிர்வு சேவை ஒப்பந்தத்தை வளர்த்தது. இதன் முலம், அவற்றிடையில், இணையத்தளத் தொடர்பு, மூலவளப் பகிர்வு, ஒருமுகப்பட்ட சேவை ஆகியவற்றை அவற்றின் உற்பத்திப் பொருட்கள் பெற முடியும். தற்போது, சீனா, அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல் முதலிய நாடுகளின் நூற்றுக்கு மேலான தொழில் நிறுவனங்கள் இக்கூட்டணியில் சேர்ந்துள்ளன. இது பற்றி, இக்குழுமத்தின் தலைவர் sun yu ning கூறியதாவது,

113 நிறுவனங்கள் இக்குழுமத்தில் சேர்ந்துள்ளன. சீனாவில் 85 விழுக்காட்டான தொலைக்காட்சி தொழில் நிறுவனங்களும், அரை கணினி மற்றும் செல்லிடப்பேசி தொழில் நிறுவனங்களும் இக்குழுமத்தின் உறுப்பினர்கள் என்றார் அவர்.

1 2