• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Jun 19th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-17 18:35:46    
பெய்ஜிங் Zhong Guan Cun தொழில்நுட்பத் தோட்டத்தின் தற்சார்பு புத்தாக்கம்

cri

நடுரக மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களை வளர்க்கும் வகையில், zhongguancun மேலாண்மை கழு, தற்சார்ப்புக்கு ஊக்கமளிக்கும் பல கொள்கைகளை வெளியிட்டது. நிதி ஆதரவைத் தவிர, சீன அறிவியல் கழகம், சீன தொழில் நுட்ப அமைச்சகம் முதலிய அமைப்புகளுடன் ஒத்துழைப்பு ஆதரவு முறைமையை உருவாக்கியது. சோதனைப் பணி நடைபெற்ற ஓராண்டு காலத்தில், ஆதரவு பெற்ற திட்டப்பணிகளின் எண்ணிக்கை 200 எட்டியது. நிதி ஆதரவு சுமார் 100 கோடி யுவானை எட்டியது. சமூக முதலீடு 400 கோடிக்கு மேலாக தூண்டியது.

சோதனைப் பணி துவங்கிய முதல், தொழில் நிறுவனங்கள், முக்கிய தொழில்நுடபத்தில் பெரிய முன்னேற்றமடைந்துள்ளன. பல புதிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் தொழில்நுடபங்கள், சந்தையில் நுழைந்துள்ளன என்று zhongguancun மேலாண்மை குழுவின் இயக்குநர் dai wei கூறினார்.

முந்தைய அடிப்படையில், zhongguancun அறிவியல் தொழில்நுடபத் தோட்டம், இவ்வாண்டின் மே திங்கள், மேலும் 79 தொழில் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தி, 2வது தொடர் சோதனை தொழில் நிறுவனங்களாக மாற்றியது. பெய்ஜிங் Hi-tech Wealth தொழில் நிறுவனம், அவற்றில் ஒன்றாகும். இதுவரை, அது, 28 அறிவுசார் காப்புரிமைகளையும், 10 மைய தனிக்காப்புரிமை நுட்பங்களையும் பெற்றுள்ளது. புத்தாக்கம், தொழில் நுடபத்தில் நிலவிய அதேவேளையில், மேலாண்மை முறையிலும் நிலவுகிறது.  

தொழில்நுட்பப் புத்தாக்கம் எங்கள் மையமாகும். தவிரவும், வணிக முறையின் புதாக்கத்திற்கும், பண்பாட்டுப் புதாக்கத்திற்கும் முக்கியத்துவமளிக்க வேண்டும். குறைவான செலவு மற்றும் விலைவாசியைப் பயன்படுத்தி போட்டியிடுவது அடிப்படையில் கைவிட வேண்டும். உற்பத்திப் பொருட்களின் மேலதிக மதிப்பை உயர்த்து, சிறந்த சுழற்சி வளர்ச்சிப் பாதையை நடத்த வேண்டும் என்றார் அவர்.


1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040