• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-26 16:33:24    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இன்பமான வாழ்க்கை

cri

சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் முதல் நாள், இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளியின் புதிய கல்வி ஆண்டு துவங்கும் நாளாகும். ஆனால், இவ்வாண்டு மே 12ஆம் நாள் சிச்சுவான் மாநிலத்தின் வென் ச்சுவானில் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கத்தினால், உள்ளூர் குழந்தைகள் பலர் தங்களது பள்ளிக்கூடங்களை இழந்தனர்.

கடுமையான அந்த நிலநடுக்கம் நிகழ்ந்த பின், ஹேபெய் மாநிலத்து தாங் ஷான் நகரின் யூ தியன் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சுங் ச்சி யோங், பேரிடர் நீக்கப் பணிக் குழுவில் சேர்ந்து, இதர தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து சிச்சுவான் மாநிலத்துக்குச் சென்றார். இடிபாடாக மாறிய பள்ளிக்கூடங்களைக் கண்ட அவர், பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த குழந்தைகளை அவர்களது கல்வி தடைபடாமல் தொடர்வதற்காக தன்னுடைய சொந்த ஊரான ஹேபெய் மாநிலத்துக்கு அழைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதினார். தனது எண்ணத்தை அவர் யூ தியன் மாவட்டத்தின் யின் ஹே இடைநிலைப் பள்ளிக்குத் தெரிவித்ததும், உடனே பள்ளியின் ஒப்புதலை பெற்றார். பாதிக்கப்பட்ட இந்தக் குழந்தைகளின் கல்வி மற்றும் வசிப்பிடத்துக்கான கட்டணத்தை விலக்குவதென இப்பள்ளி தெரிவித்தது. தாங் ஷான் நகராட்சியும், யூ தியன் மாவட்ட அரசும் சுங் ச்சி யோங்கின் எண்ணத்தை ஆதரித்து, இந்தக் குழந்தைகளின் வாழ்க்கைச் செலவுக்குப் பொறுப்பேற்பதாக வாக்குறுதி அளித்தன.

ஜுன் 16ஆம் நாள், சுங் ச்சி யோங் பாதிக்கப்பட்ட ஆன் மாவட்டத்திலிருந்து 246 துவக்கப் பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு, யின் ஹே இடைநிலைப் பள்ளிக்குச் சென்றார். இப்பள்ளியின் துவக்கப் பள்ளிப் பகுதியில், அனைத்து வகுப்பறைகளிலும் மாணவர்கள் உணர்வுப்பூர்வமாக பாடம் படித்துக் கொண்டிருந்தனர். சீன மொழி, கணிதம், ஆங்கிலம், இசை உள்ளிட்ட அடிப்படை பாடங்களைத் தவிர, இதர பல பாடங்களும் இந்த மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

1 2