• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-26 16:33:24    
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இன்பமான வாழ்க்கை

cri

மாணவர்களுக்கு பல்வகை பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் பல்வேறு வழிகளில் முயன்றனர். துவக்கப் பள்ளிப் பிரிவுத் தலைவர் லி சுய் லிங் அம்மையார் செய்தியாளரிடம் கூறியதாவது—

"இந்தக் குழந்தைகள் புத்திக்கூர்மை மிக்கவர்கள். இதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டுப் போட்டி நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்கின்றோம். அவர்களுக்கு உடல் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. Accordion இசைக்கருவி, பாடல், கணினிப் பயன்பாடு, கைவினைப் பொருள் தயாரிப்பு, காகித கத்தரிப்பு, ஆங்கில பாடல் உள்ளிட்ட பாடங்களையும், சீன மொழி மற்றும் ஆங்கில மொழியிலான பேச்சுப் போட்டியையும் நடத்தியுள்ளோம். அவர்களின் தனிச்சிறப்புக்கிணங்க பாடங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வோம்" என்றார் அவர்.

இந்தக் குழந்தைகள் நல்ல உணவு, ஆடை, வசிப்பிடம் ஆகியவற்றை அனுபவிக்க, யின் ஹே இடைநிலைப் பள்ளி பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது. சிச்சுவான் மாநிலத்திலிருந்து வந்ததால் அவர்களின் உணவு வழக்கம் வித்தியாசமானது. காரமான உணவுகளை அவர்கள் மிகவும் விரும்புகின்றனர். உணவுவிடுதிக்கான பொறுப்பாளர் லியூ யோங் லியங் கூறியதாவது—

"காலை உணவில் கேக், இறைச்சி, ரொட்டி, பால் முதலியவை இடம்பெறும். நண்பகல் உணவில் சிச்சுவான் பாணி உணவு வகை ஒன்று இருப்பதை உறுதிப்படு்த்துகின்றோம். ஒவ்வொரு நாளும் மிளகாய் எண்ணெய், மிளகாய் சாஸ் ஆகியவற்றையும் தயாரிக்கின்றோம். அவர்கள் தங்கள் விருப்பப்படி உட்கொள்ளலாம்" என்றார் அவர்.

நல்ல உணவுகளை உட்கொண்டு, வேடிக்கையாக பாடங்களைப் படித்து, மகிழ்ச்சியுடன் விளையாட முடியும் என்பதால், குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு நாளும் இன்பமாக வாழ்கின்றனர். இந்தப் பள்ளி அன்பான குடும்பம் என அவர்கள் கூறுகின்றனர்.


1 2