 80 நாடுகளிலிருந்து 10,000 அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ள இந்த உலகின் மிகப்பெரிய இயற்பியல் ஆய்வுத் திட்டத்தில் 20 சீன அறிவியலாளர்கள் செயல்பட்டுள்ளதாக சீன அறிவியல் கழக உயராற்றல் இயற்பியல் நிறுவனத்தின் பேராசிரியர் ஜின் ஷான் தெரிவித்தார். 1998 ஆம் ஆண்டிலிருந்து சீன அரசு இத்திட்டத்திற்கு நிதி அளிக்க தொடங்கியது. 46 மீட்டர் நீளமும் 25 மீட்டர் சுற்றளவும் 7,000 டன் எடையும் கொண்ட மிக பெரிய அமைப்பான அட்லஸ் உள்ள நான்கு மின்வெட்டிகளில் இரண்டிற்கு சீன அறிவியலாளர்கள் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். இதற்காக முன்னர் இல்லாத உயர் நிலையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படை இடப்பட்டுள்ளதாக பீக்கிங் பல்கலைக்கழக பேராசிரியர் Qian Sijin தெரிவித்தார்.
இந்த சுரங்க வளையத்திற்குள் அணுவின் ஒரு பகுதியான புரோட்டான்களை பெரிய வெடிப்புக்காக செலுத்தியுள்ளனர். இது வெற்றிகரமாக செயல்படுவதாக மைய கனிணி திரையில் பெய்ஜிங் நேரப்படி பிற்பகல் 4.36 மணிக்கு சமிக்ஞகள் வெளியாயின. தற்போது இடமிருந்து வலமாக சுரங்க வளையத்திற்குள் வினாடிக்கு 11,000 முறை அதாவது ஒளிவேகத்திற்கு சற்று குறைவான வேகத்தில் சென்று வரும் புரோட்டான் துகள்கள், அடுத்தக்கட்டத்தில் வலமிருந்து இடமாக சென்றுவருமாறு இயக்கப்படும். அப்போது தான் அறிவியலாளர்கள் எதிர்பார்க்கும் இந்த மிக பெரிய வெடிப்பு உருவாகும். இந்த ஹாட்ரன் மோதல் கருவியில் நடைபெறும் அனைத்து மாற்றங்களும் மிக பெரிய அறையில் வைக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று இணைக்கப்ட்டுள்ள "செர்ன்" மைய கனிணிகளில் பதிவாகும். இரண்டு மூன்று திங்களுக்கு பின்னர் முடிவுகள் உலகிற்கு வெளிப்படுத்தப்படும். இதனால் நாம் இது வரை அறியாமல் இருக்கும் பல விடயங்கள் பற்றி அறிய வருவோம் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.
1 2
|