• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-01 17:04:22    
உலகம் உருவாகியதை அறிய புது முயற்சி – பகுதி II

cri

அதாவது இந்த அண்டவெளியில் விண்வெளி, பால்வீதி, நட்சந்திரங்கள், சூரிய மண்டலம், கோள்கள் அனைத்தும் வெறும் 4 விழுக்காடு தான். இந்த நான்கு விழுக்காட்டிலேயே பல விடயங்கள் பற்றி நாம் அறியாமல் இருக்கின்றோம். மேலும் டார்க் எனர்ஜி எனப்படும் அறியப்படாத ஆற்றல் 73 விழுக்காடும், டார்க் மேட்டர் எனப்படும் அறிப்படாத பருப்பொருள் 23 விழுக்காடும் நாம் மேலும் அறியாமல் உள்ள பகுதிகளாக உள்ளன. இவற்றை பற்றிய பல விடயங்கள் நமக்கு அறியவரும்.

இந்த பரிசோதனை எதிர்ப்புகள் இன்றி நடைபெறவில்லை. பல அறிவியலாளர்கள் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை நிறுத்த வேண்டுமென்று வழக்கு தொடுத்தவர்களும் உண்டு. இந்த ஆய்வால் உலகமே அழிந்து போகலாம் என்று இவர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறு செயற்கை மோதல்களை உண்டாக்குகின்ற போது ஈர்ப்பு விசை மிக அதிகம் கொண்ட பிளாக் கோல்ஸ் எனப்படும் கருங்குழிகள் உருவாகலாம். அவை பூமி, கோள்கள், சூரியன் அனைத்தையும் இழுத்து கொண்டால் உலகம் அழிய நேரிடும் என்று வாதிடுகின்றனர். மேலும் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் பாசன் உருவானபோது இந்த அண்டமும், உயிர்களும் உருவாயின. அப்படியானால் செயற்கையாக அதே துகள் உருவாக்கப்படும்போது இன்னொரு அண்டம் உருவாகும் தானே என்று வாதிடுபவர்களும் உண்டு.

ஆனால் எல்லாற்றையும் சமாளித்து விட்டு முதல் கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது. அது வெற்றிகரமாக நடைபெறுவதையும் உறுதி செய்துள்ளனர். இதனுடைய முடிவுகளை உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. உலக மக்களின் வாழ்கை முன்னேற்றத்திற்கான அதிக பலன்களை இது கொண்டுவர வேண்டுமென விரும்புவோம்.


1 2