சீனாவின் சில இடங்களுக்கான சிறப்புப் பெயர்கள் அல்லது சாட்டுப்பெயர்கள் சிலவற்றை நாம் கடந்த வாரம் பண்பாடு நிகழ்ச்சியில் வழங்கக் கேட்டோம்.

ஹெய்லுங்ஜியானின் ஹார்பின் நகரம் ஏரிகளின் நகரமாகவும், குவாங்துங்கின் மாவ்மிங் வாழைப்பழ நகரமாகவும், ஃபூச்சியன் மாநிலத்தின் ச்சுவான்ஷோ கெண்டைமீன் நகரமென்றும் அறியப்படுவது போல் ஹாங்காங் நறுமண துறை என்றழைக்கப்படுகிறது. ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதற்கு பல கதைகள், கருத்துக்கள் கூறப்படுகின்றன.

முன்பொரு காலத்தில் நறுமண அத்தை என்ற ஒரு பெண் கடல் கொள்ளைக்காரி இருந்தாராம். ஹாங்காங் தீவுதான் அவரது தளமாக இருந்ததாம். அங்கிருந்துதான் அவர் தனது கொள்ளைத் திட்டங்களை செயல்படுத்தினாராம் எனவே இது நறுமண துறை என்றழைக்கப்பட்டதாம். இன்னொரு கருத்து, இளம் நறுமண துறை என்ற இடத்தில் நீர்வீழ்ச்சி ஒன்று இருந்ததாம். அங்கே கடற்பயணம் செல்லும் மாலுமிகள் நீர் சுவையாக இருந்ததால் நீர்வீழ்ச்சியில் எப்போதும் அவர்கள் தங்களின் தாகம் தணித்துக்கொண்டனராம். எனவே அந்த தீவுக்கே நறுமண துறை என்ற பெயர் வழங்கப்பட்டதாம்.
1 2
|