• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-09 17:23:54    
சீனா

cri

ஷிபாய் வளைகுடாவுக்கு அருகே நீண்ட காலத்துக்கு முன் நறுமண துறை என்ற ஒரு குக்கிராமம் இருந்ததாம். இன்றளவும் அவ்விடம் குறு நறுமண துறை அல்லது நறுமண துறை அரண் என்றழைக்கப்படுகிறது. இன்றைய நறுமணத்தீவும், கவ்லூனும் முன்பு குவாங்துங் மாநிலத்தின் துங்குவான் வட்டத்தின் நிர்வாக எல்லைக்குள் இருந்தவை. அந்த காலக்கட்டத்தில் குவாங்துங் மாநிலத்தின் துங்குவான வட்டத்தில் ஒருவகை நறுமண மரத்திலிருந்து பெறப்பட்ட ஒருவகை திரவத்தை திரட்சி அல்லது உறையச் செய்து உருவாக்கப்பட்ட நறுமணப் பொருள் பெருமளவில் கிடைத்தது. சில வகை நறுமணங்கள் ரோசின் எனப்படும் குங்கிலியமாகவும், சில சந்தன மரத்தின் நறுமணமாகவும் கிடைத்தன. இவை பல்வேறு நறுமண பொருட்களாக தயாரிக்கப்பட்டன. தீமூட்டியோ, வெந்நீரில் வெப்பமூட்டியோ இவை இருக்கும் இடத்தை வாசனை ததும்பி வழியச் செய்ய வைத்தன. இவை துங்குவானிலிருந்து கிடைத்ததால் குவான் நறுமணம் என்று அழைக்கப்பட்டன.

பின் க்ஷினான் வட்டம் துங்குவானிலிருந்து பிரிந்தது. ஷினான் வட்டம் பின்னாளில் பாவ் ஆன் வட்டமென்றும், பிறகு ஷென்சன் நகரமென்றும் பெயர் மாறியது. பாவ் ஆன் வட்டத்தின் கீழ் வந்ததே நறுமண துறை. 1840ம் ஆண்டின் அபினி போருக்கு பின் இந்த நறுமண துறை என்ற தீவை (ஹாங்காங்கை) சிங் அரசு பிரிட்டனுக்கு தாரை வார்த்தது அல்லது பிரிட்டனிடம் ஒப்படைத்தது.

சீனாவில் சில இடங்களின் பெயர்களை கேட்கும் நமக்குள் சில சந்தேகங்கள் எழுவதுண்டு. எடுக்காட்டாக பெய்ஜிங், நான்ஜிங், ஹூனான், ஹூபெய், ஹெனான், ஹெபெய், ஷான்துங், ஷான்ஷி, குவாங்துங், குவாங்ஷி. இவற்றில் பெய் அன்பது வடக்கையும், நான் என்பது தெற்கையும் குறிக்கும். துங் என்பது கிழக்கையும், ஷி என்பது மேற்கையும் குறிக்கும். சீன வரலாற்றை புரட்டினால் நான்ஜிங் ஒருகாலத்தில் தலைநகரமாக இருந்தததை அறியமுடியும். ஆக நான் ஜிங் என்பது தெற்கு தலைநகரம், பெய்ஜிங் என்பது வடக்கு தலைநகரம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.


1 2