• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-09 17:21:58    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

cri

நடந்தேறிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், அப்போதுள்ள மிக புதிய அறிவியல் தொழில் நுட்பங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியும், ஒரு அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும். விளையாட்டரங்கு மற்றும் திடல்களின் கட்டுமானம், தகவல் ஊடகம், போக்குவரத்து முதலிய துறைகளில், பல்வேறு முன்னேறிய அறிவியல் தொழில் நுட்ப சாதனைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய நிகழ்ச்சியில், அந்த புதிய தொழில் நுட்பங்கள் பற்றி தொடர்ந்து தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.  

29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு, பெய்ஜிங்கில் 12 விளையாட்டு அரங்குகள் மற்றும் திடல்கள் புதிதாகக் கட்டியமைக்கப்பட்டுள்ளன. மிகப்பல புதிய அறிவியல் தொழில் நுட்ப கனிகள் அவற்றில் பயன்படுத்தப்பட்டு, அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் என்ற கருத்தைச் சிறப்பாக வெளிப்டுத்துகின்றன.

ஒலிம்பிக் விளையாட்டு மையப் பிரதேசத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில், உயர் தர எண்ணியல் திரைகள் போடப்பட்டுள்ளன. முன்னேறிய ஊடொளி வெளிப்பாடு தொழில் நுட்பம் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாரம்பரிய தொலைக்காட்சி திரையை விட, ஊடொளி திரையின் வெளிப்பாடு மேலும் தெளிவாகவும் துள்ளியமாகவும் இருக்கும். அது மட்டுமல்ல, இதன் எரியாற்றல் பயன்பாட்டு அளவு 75 விழுக்காடு குறைவதாக இந்த தொழில் நுட்பம் பற்றி ஆராய்ந்த சீன அறிவியல் கழகத்தின் ஒளி மற்றும் மின்சார ஆய்வகத்தின் பொறுப்பாளர் wang yu கூறினார். அவர் மேலும் கூறியதாவது

தற்போது, 3வது தலைமுறை திரை மூலம், மனிதர் உணரக்கூடிய நிறங்களின் சுமார் 30 விழுக்காடு பகுதி மட்டும் மக்களுக்குக் கிடைக்கலாம். ஊடொளி போன்ற புதிய ஒளி, வெளிப்பாடு தொழில் நுட்பத்தில் பயன்படுவதால், மக்கள் மிகப்பல நிறங்களைக் கண்டுகளிக்கலாம் என்றார் அவர்.

90 ஆயிரத்துக்கு மேலான இரசிகர்கள் அம்ர்ந்த விளையாட்டுகளைக் கண்டுகளிக்க வசதி தரும் சீனத் தேசிய விளையாட்டு அரங்கில், அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள் தட்பவெப்ப வசதி, காற்றோட்ட வசதி முதலியவற்றை கணிணி மூலம் பல முறை ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு பகுதியிலுள்ள ரசிகர்கள் உணரக் கூடிய தட்பவெப்பம், காற்று ஓட்ட வேகம் ஆகியவை அதன் மூலம் அளவிடப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடக்கும் போது, ரசிகர்கள் மேல் பகுதி, கீழ் பகுதி, சாதாரண அல்லது சிறப்பு விருந்தினர்கள் என எவ்வகை இருக்கைகளில் அமர்ந்தாலும் இயற்கையான ஒளி மற்றும் காற்றை பெறலாம் என்று சீனத் தேசிய விளையாட்டு அரங்கு கட்டுப்பாட்டு நிறுவனத்தின் துணை இயக்குநர் zhang heng li கூறினார். அவர் கூறியதாவது,

இது ஒரு திறந்த விளையாட்டு அரங்காகும். கோடைக்காலத்தில், பார்வையாளர்கள் இருக்கைகளில் அமர்த்திருக்கும் போது, அவர்கள் உணரக் கூடிய வசதி அளவு பற்றி கணிணி மூலம் கணிகிட்டுள்ளேன். கிடைத்த தகவல்களின் படி, மக்கள் மிகவும் வசதியாக நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம் என்றார் அவர்.

1 2