• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-09 17:21:58    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது, ஒலிம்பிக் மையப்பகுதியில் மாசபாடற்ற சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு, 500க்கு மேற்பட்ட புதிய எறியாற்றல் பயன்பாட்டு வாகனங்கள் இயங்கப்படும். ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகள் மற்றும் திடல்களில் 26 விழுக்காட்டு எரியாற்றல் மாசுபாடற்ற நிலையில் விநியோகிக்கப்படும். மேலும், அது வெளியேற்றும் மாசு நீரைக் கையாண்டு மீண்டும் பயன்படுத்தும் விகிதம் 100 விழுக்காட்டை அடையும் என்று தெரிய வருகின்றது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் திங்கள் வரை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் தொடர்புடைய அறிவியல் தொழில் நுட்ப ஆய்வில் சீன அரசு 600 கோடிக்கு மேலான யுவான் ஒதுக்கியுள்ளது. விளையாட்டு அரங்குகளின் கட்டுமானம் உள்ளிட்ட, இந்த விளையாட்டு விழாவுடன் தொடர்புடைய போக்குவரத்து, பாதுகாப்பு, ஊடக தகவல் முதலிய பல துறைகளில் அறிவியல் தொழில் நுட்ப கனிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தணிவு செய்யும் வகையில், நடைமுறை போக்குவரத்து தகவல்களை உடனடியாக பரவல் செய்யும் சாலையோடல் வசதி பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலம், பயணிகள் பெய்ஜிங் நகரின் 5வது சுற்றுவட்ட பாதைக்குட்பட்ட சாலைகளின் போக்குவரத்து நிலைமையை உடனடியாக அறிந்து கொள்ளலாம். பெய்ஜிங் போக்குவரத்து தகவல் மையத்தின் தலைவர் wang gang கூறியதாவது

காரில் நடைமுறை போக்குவரத்து தகவல்களை பெறும் சாலையோடல் வசதி பொருத்தப்பட்டால், சாலைகளின் புதிய போக்குவரத்து நிலைமையை எப்போதும் அறிந்து கொள்ளலாம். இத்தகைய தகவல்கள் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் என்றார் அவர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், இந்த அறிவியல் தொழில் நுட்பக் கனிகள் மக்களின் வாழ்க்கையில் மேலும் பரவலாக்கப்படும் என்று சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சர் wan gang கூறினார். அவர் கூறியதாவது

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப்பின், புதிய மாசுபாடற்ற எரியாற்றலைப் பயன்படுத்தும் வாகனங்கள் மேலும் அதிகமான நகரங்களில் பரவலாக பயன்படுத்தப்படும். குடியிருப்புப் பிரதேசங்களில் நீர் வளத்தைச் சிக்கனப்படுத்தும் வகையில், மாசு நீர் கையாள்ளப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும். தவிரவும், TD-SCDMA அதாவது சீனாவின் 3வது தலைமுறை மடமாடும் செய்தி தொடர்பு தர தொழில் நுட்ப வரையறையும் நாடளவில் பரவலாகும் என்றார் அவர்.


1 2