• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-11 09:32:59    
உலகில் உயந்தவர்

cri
உலகில் உயந்தவர்

உகலளவில் பல விடயங்கள் முதல் இடம்பெற்று வரலாற்றில் பொறிக்கப்டுகின்றன. அதில் உயரமான மனிதர் மற்றும் மரம் பற்றிய தகவல்கள் இதோ. உலகத்திலேயே உயரமான மனிதரான, சீனாவின் உள் மங்கோலியாவை சேர்ந்த Bao Xishun ஒரு மகனுக்கு தந்தையாகியிருக்கிறார். 236 சென்டிமீட்டர் உயரம் கொண்ட 57 வயதான அவர், தனது மகனை செல்லமாக Tian You என்று அழைக்கிறார். வழக்கமாக பிறக்கும்போது குழந்தைகள் 47 முதல் 52 சென்டிமீட்டர் உயராமாக இருக்கும். இவருக்கு பிறந்த குழந்தை 4 சென்டிமீட்டர் அதிக உயரமாக, அதாவது 56 சென்டிமீட்டர் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே மிக உயரமான மரம் ஆஸ்திரோலியாவின் தென்பகுதியில் உள்ள தீவான தாஸ்மானியா காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதன் மேலாண்மை இயக்குனர் Bob Gordon அறிவித்துள்ளார். மாநிலத்தின் தலைநகரான Hobart டிலிருந்து தென்மேற்கு பகுதியில் 80 கிலோமீட்டர் தொலைவிலான Tahune Airwalk சுற்றுலா தலத்தில் இம்மரம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 984.3 அடி உயரமானது. 405 சென்டிமீட்டர் விட்டமுள்ள Centurion என்று பெயர் பெறும் இதன் உயரத்தை ஊடொளி மூலம் அளவிட்டுள்ளனர். 283.8 அடி நீளமும், 390 சென்டிமீட்டர் விட்டமும் உள்ள Triarius என்ற மரம் உலகிலேயே இரண்டாவது மிக பெரிய மரமாகும்.

1 2