• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-11 09:32:59    
உலகில் உயந்தவர்

cri

இறந்தும் வாழும் காதல்

காதல் அழியாது. காதல் இறந்தாலும் வாழும் என்றெல்லாம் காதலின் மேன்மையை போற்றி புகழ்ந்துரைப்பார்கள். அன்றாட வாழ்கைச்சூழலில் நாம் காணும் சில அனுபவங்கள் இவையெல்லாம் பொய்யாக இருக்குமோ என்று கூட எண்ணசெய்யும். உண்மையான காதல் அழியாது. அது இறந்தாலும் வாழும் என்பதை பலர் தங்கள் அன்றாட வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிவருகிறார்கள். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் சீனாவின் Guangdong மாநிலத்திலுள்ள Zhongshan னில் வாழும் சாமுவேல் என்ற இளைஞர். அவர் தனது 26 வயது காதலியான Yan Lin என்பவரின் பிணத்திற்கு தாலிகட்டி திருமணம் செய்துள்ளார்.

மூன்றாண்டுகளாக சாமுவேலை காதலித்து வந்த Yan Lin வர்த்தக மேலாளராக பணிபுரிந்து வந்தார். எதிர்பாராத சாலைவிபத்தில் திடீரென அவர் இயற்கை எய்தினார். தனது காதலியை அன்றி வேறொருவரை கரம்பிடிக்க மனமில்லாத சாமுவேல் அவருடைய உயிரில்லா உடலில் தாலிக்கட்டினார். சீன வழக்கப்படி, இறந்தோரை குறிக்கும் வகையில் கோழியை மணப்பெண்ணாக வைத்து நடைபெறும் திருமண முறையும் நடந்தேறியது. Yan Lin இவ்வுலகில் இல்லாமல் இருந்தாலும் அவரே தனது மனைவி என்று கூறுகிறார் சாமுவேல். இது சட்டப்படியான திருமணம் இல்லை என்றாலும், முறைப்படியான திருமணத்தின் அனைத்து கடமைகளை நிறைவேற்றுவேன் என்கிறார். Yan Lin உடலின் முன்னால் தான் அளித்த அவரது தாய் தந்தையை நன்றாக பார்த்துக்கொள்வது போன்ற வாக்குறுதியையும், இதரக் கடமைகளையும் முழுமையாக நிறைவேற்றப் போவதாகவும் அவர் உறுதி கூறியுள்ளார். காதல் இறந்தும் வாழும் என்பது இது தானோ!


1 2