வகுப்பு தோழராய் தந்தையும் மகனும்



சிலருக்கு அதிகம் படிக்க விரும்பமிருந்தாலும், குடும்ப சூழ்நிலை அதிகம் கற்க அனுமதிப்பதில்லை. Hainan மாநிலத்தின் Changjiang யை சேர்ந்த 39 வயதான Chen Rongli க்கும் அதுதான் நிகழ்ந்தது. வறுமையான குடும்பச்சூழலால் அவர் துவக்கப்பள்ளி படிப்பை துறக்க வேண்டியதாயிற்று. ஆனால் மீண்டும் பள்ளிக்கு வந்து கல்வி கற்பேன் என்று அப்போதே அவர் சூளுரைத்தார். ஒருவனின் எதிர்காலத்தை அறிவு கண்டிப்பாக மாற்றும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கும் அவர், 2001 ஆம் ஆண்டு கல்விகற்க மீண்டும் பள்ளிக்கு வந்தார். ஏழு ஆண்டுகால கல்விக்கு பின்னர் Hainan வேளாண் கல்லூரியில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளர். அங்கு அவர் தனது இரு மகன்களுடன் சேர்ந்து விவசாயம் கற்கவுள்ளார். கல்லூரி நுழைவுத்தேர்வில் அவர் தோற்றாலும், Hainan வேளாண் கல்லூரியின் முதல்வர் Lu Hongzhuan அவரது முயற்சியை கண்டு, விவசாயம் படிக்க அனுமதித்திருக்கிறார். பட்டப்படிப்புக்கு பின்னர் விவசாய பண்ணை ஒன்றை தொடங்க Chen Rongli எண்ணியுள்ளார்.
1 2
|