• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-22 21:33:09    
Shenzhou-7விண்வெளி பயணம் - பகுதி II

cri

விண்வெளி வீரரான Zhai zhigang அணிந்திருந்த விண்வெளி வீரர்களுக்கான ஆடை சீனாவில் தற்சார்பாக தயாரிக்கப்பட்டதாகும். கற்பனையான புத்தபெண் கடவுளின் பெயரில் "விண்வெளியில் பறப்பது" என்ற பொருளுடன் Feitian என்றழைக்கப்படும் இந்த விண்வெளி வீரர்களுக்கான ஆடை 120 கிலோ எடையுடையது. 44 இலட்சம் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இதனை அணிந்து கொள்ள 12 மணிநேரமாகுமாம். Shenzhou-7 விண்கலம் சுற்றுவட்ட கட்டகம், பூமிக்கும் திரும்பும் கட்டகம், முன்னோக்கி செலுத்தும் கட்டகம் போன்ற மூன்று கட்டமைப்பு பகுதிகளை கொண்டு, ஐந்து நாட்கள் பயணம் செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. விண்கலத்தின் உள்ளே, விண்வெளி வீரர்கள் அமைப்பு, விண்வெளி செயலாக்க அமைப்பு, மனிதருள்ள விண்கல அமைப்பு, ஏவுகல அமைப்பு, ஏவப்படும் அமைப்பு, தொலைதூரக்கட்டுபாடு மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு, தரையிறங்கும் அமைப்பு, விண்வெளி ஆய்வு அமைப்பு என எட்டு அமைப்புகள் காணப்பட்டன. விண்வெளிக்கு சென்ற வீரர்கள் உண்பதற்கு 80 வகையான உணவுகள் அனுப்பப்பட்டன. Kung-pao கோழி இறைச்சி, இறால் மற்றும் உலர்ந்த பழங்கள் உள்ளிட்டவை அதில் சேர்ந்திருந்தன. இந்த விண்கலனை செலுத்துவதற்காக 100 மீட்டர் உயரத்திலான ஏவு கோபுரம் கட்டப்பட்டிருந்தது. பூமியிலான கட்டுபாட்டு மையத்திலிருந்து 1,500 மீட்டர் தூரத்தில் இது அமைக்கப்பட்டிருந்தது. Shenzhou-6 டன் ஒப்பிடுகையில் Shenzhou-7 விண்கலம், தொழில்நுட்ப ரீதியில் 200 மாற்றங்களை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. Shenzhou-7 விண்கலம் ஏவப்பட்டது, சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்தது, விண்வெளியில் வீரர்கள் நடந்தது, பூமிக்கு திரும்புகின்ற விண்கலப்பகுதி விண்வெளி வீரர்களுடன் தரையிறங்கியது போன்ற அனைத்து நிகழ்வுகளையும் தொலைக்காட்சி வழியாக மக்கள் அனைவரும் நேரடியாக பார்க்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
1 2