
சீன விண்கல ஏவுகணை தொழில்நுட்ப கழகத்தால் 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட, Shenzhou-7 விண்கலத்தை ஏவிய Long March II-F என்ற ஏவுகணை இத்திட்டத்தோடு ஓய்வு பெறப்போகிறது. 58.3 மீட்டர் நீளமும், 480 டன் எடையும் கொண்ட இது நிறைவேற்றிய கடைசி பணியும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தொடர்ந்து சீனா, மிக விரைவாக முன்னோக்கி இயக்கக்கூடிய, நெகிழும் தன்மையுடைய கட்டகங்களை கொண்ட, பல செயற்கை கோள்களுக்கு பொருந்தக்கூடிய புதிய தலைமுறைக்கான ஏவுகலனை தயாரிக்கவுள்ளது.

விண்வெளியில் நடந்து, விண்கலத்தின் மேல் கருவிகளை பொருத்தும் தொழில் நுட்பத்தை இந்த பயணத்தின் போது சீனா சோதனை செய்து வெற்றிபெற்றுள்ளது. தனது அடுத்த திட்டமாக இரண்டு விண்கலங்கள் தனித்தனியாக அனுப்பப்பட்டு, விண்வெளியில் ஒன்றாக இணைவதோடு, அதிலுள்ள விண்வெளி வீரர்கள் விண்கலங்களில் உள்ள பொருட்களை இடமாற்றும் நடவடிக்கையை சீனா நனவாக்கவுள்ளது. அப்படியானால் விண்வெளியில் ஆய்வு கருவிகளை பொருத்துவதற்கும் பழுதுகளை சரிபார்க்கும் முயற்சிகளுக்கும் ஒத்திகையாக இது அமையும். 2020 ஆம் ஆண்டிற்குள் சீனா விண்வெளியில் ஆய்வுக்கூடத்தை அமைக்கவுள்ளது. பணித்திட்டங்களை திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றி விடுவதுதான் சீனாவின் வரலாறாக உள்ளதால், 2020 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளியில் ஆய்வுக்கூடத்தை சீனா நனவாக்க போவது உறுதி. 1 2
|