• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-25 09:47:27    
பிறர்நலன்

cri
பிறர்நலன்

பிறர்நல எண்ணம் என்பது மனித குலத்தின் இனிய நல்ல பக்கம். பிறர்நலத்திற்காக வாழ்ந்தவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களாக போற்றப்படுகிறார்கள். மதிக்கப்படுகிறார்கள். சீனாவில் ஒரு பல்கலைக்கழக மாணவி தன்னால் இயன்ற பிறர் நல உதவியால் பல இடம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களை பாதுகாக்கிறார் என்றால் மிகையாகாது. Hunan தலைநகர் Changsha விலுள்ள பல்கலைக்கழகத்தில், புதிதாக கல்வி கற்க வருகின்ற இளைஞர்கள் தங்களது இரண்டுவார இராணுவ பயிற்சியை முடித்துவிட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து இவ்வாண்டு குறைந்தது 1000 இராணுவ சீருடைகளையாவது தன்னால் சேர்த்துவிட முடியும் என்று அப்பல்கலைக்கழத்தில் தொழில்துறையில் இரண்டாம் ஆண்டு கல்விபயிலும் Zhu Shilei எதிர்பார்க்கின்றார். இவ்வாறு கிடைக்கும் சீருடைகளை, நகரங்களில் வேலைக்காக இடம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு வழங்க அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டு, முதலாண்டு மாணவர்கள் தாங்கள் 75 யுவான் அதாவது 11 அமெரிக்க டாலர் விலையில் வாங்கிய இராணுவ சீரூடைகளை அணியாமல் இருந்ததை கண்ட Zhu Shilei இந்த பிறர்நல சேவை பணியை தொடங்கினார். 500 சீரூடைகளை சேர்த்த கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு ஒரு மடங்கு அதிகமாக சேர்த்து இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அளிக்க அவர் எண்ணியுள்ளார்.

1 2