பாம்பால் தசைபிடிப்பு அகற்றுதல்

ஒருநாள் வெளியே சுற்றிவிட்டு வந்தாலோ அல்லது அழுத்தங்களுடன் வேலைகளை மேற்கொண்டாலோ, கை, கால் மற்றும் முதுகிலுள்ள தசையை அமுக்கி பிடித்து விட்டால் தசைகளிலுள்ள அழுத்தங்கள் நீங்கி நிதானம் கிடைக்கும். இவ்வாறு தசையை பிடித்து அமுக்கி விட்டு தசைகளிலான அழுத்தங்களை நீக்க பல்வேறு நிலையங்கள் உள்ளன. அதில் பயிற்சி பெற்ற பார்வையற்றோரால் நடத்தப்படுகின்ற தசைபிடிப்பு அகற்றும் நிலையங்கள் புகழ்பெற்று விளங்குகின்றன. இஸ்ரேலிலுள்ள நிலையம் ஒன்று தனது வாடிக்கையாளர்களுக்கு பாம்புகளை வைத்து இந்த தசைபிடிப்பு அகற்றும் சேவையை நடத்திவருகின்றது. இந்த சிகிச்சை ஆறு நச்சற்ற பாம்புகளால் செய்யப்படுகின்றன. பாம்புகள் வலிக்கின்ற தசைகளில் ஊர்ந்து தசைகளை அமுக்கிவிடுகின்றன. வட இஸ்ரேலில் Talmei Elaza லில் உள்ள Ada Barak அம்மையாரின் தசைபிடிப்பு அகற்றும் நிலையம் தான் அமெரிக்காவின் கலிபோர்னியா, புளோரிடா மாநிலங்களில் உள்ள அரச, சோள மற்றும் பால் பாம்புகளை தசையை அமுக்கி பிடித்துவிட பயன்படுத்துகிறது. 70 அமெரிக்க டாலர் கொடுத்தால் பாம்புகள் உடலில் ஊர்ந்து வலிக்கின்ற இடங்களில் உள்ள தசையை பிடித்து அமுக்கிவிடும். எந்தவகையான தசைபிடிப்பை தேர்ந்தெடுக்கிறோமோ அதற்கு தக்கவிதமான பெரிய அல்லது சிறிய பாம்புகள் தசையை பிடித்து அமுக்கிவிட பயன்படுத்தப்படுகிறன. இதற்காக பயன்படுத்தப்படும் எல்லா பாம்புகளும் நச்சற்றவையே. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அவை உடலின் மேல் ஊர்கின்றபோது எழுந்து ஓடாமல் இருந்தால் சரி. 1 2
|