• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Friday    Apr 4th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-29 23:12:13    
காற்றோட்டமே உயிரோட்டம்

cri

குழந்தைகள் வளர்ப்பு என்பது சிறந்ததொரு ஒரு கலை. உலகை பற்றிய முதல் பதிவுகளை தங்கள் இதயத்தில் கொள்கின்ற குழந்தைகளின் அறிவை சிறிதுசிறிதாக செதுக்கி பக்குவப்படுத்துவது மேலானப்பணி. குறிப்பாக குழந்தை பிறந்தவுடன், முதல் ஓராண்டில் காட்டப்படும் அக்கறையும், கவனிப்பும் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தை தனக்கு என்ன செய்கிறது என்று தெரிந்துகொண்டு, அதனை சரியாக எடுத்துச்சொல்ல தொடங்கும் வரை தாய் தான் அதன் உடல்நல குறைவை கண்டுபிடிக்க வேண்டிய மருத்துவராகிறார். அதிலும் பிறந்த முதலாண்டில் குழந்தைக்கு நேரக்கூடியவற்றை புரிந்து கொள்வது மிகவும் கடினம். ஆனாலும், இவற்றையெல்லாம் கவனித்து, குழந்தைகளின் நலனை தாய் மிகவும் சரியாக பேணுவதால் தான், அவரது பராமரிப்பில், அன்பில், அரவணைப்பில் வாளரும் குழந்தைகள் சமூகத்திற்கு நலமான குழந்தைகளாக அமைவார்கள் என்று அனைவரும் எண்ணுகிறார்கள்.

எவ்வளவு தான் அக்கறையும், கவனிப்பும் காட்டப்பட்டாலும், பிறந்த முதல் ஆண்டுகளில் திடீரென இறந்துவிடும் குழந்தைகள் பல உள்ளன. இந்நிலைக்கு உடல் நலக்குறைவு தொடர்பான பல காரணங்களை கூறினாலும், இவ்வாறு திடீரென நிகழக்கூடிய சில இறப்புகள் மருத்துவர்களுக்கு புதிராக அமைந்துவிடுவது உண்டு. குழந்தைகளின் திடீர் இறப்புக்கான காரணங்களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து குழந்தைகளை வளர்ப்பது, பேணுவது, குளிப்பாட்டுவது, உணவூட்டுவது என்பது தொடர்பான பல முன்மொழிவுகளையும் ஆய்வாளர்கள் வழங்கியுள்ளனர். ஆனால், குழந்தைகள் திடீரென இறப்பது மற்றும் அவை தூங்கும்போது அமைய வேண்டிய சூழல் இவையிரண்டையும் இணைத்து அமெரிக்க Kaiser மருத்தவ நல நிறுவனம் முதல்முறையாக ஆய்வு செய்துள்ளது. அதன் முடிவுகள் குழந்தைகள் மற்றும் வளரிளம் வயதினரின் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது.

அதன்படி குழந்தைகள் தூங்கும்போது காற்றோட்டமான, சாளர வசதிகளோடு உள்ள இடங்களில் தூங்க வேண்டும் என்றும் திறந்த சன்னல்களோடு அமைந்த அறைகள் மிகவும் பொருத்தமானவை என்றும் அறிவுறுத்தியுள்ளனர். வளர்ந்து வரும் இடநெருக்கடி மற்றும் வீட்டுமனை விலை உயர்வு ஆகியவற்றால் சிறுவீடுகளில் காற்றோட்டமில்லாமல் குழந்தைகள் வளர்வது குழந்தைகளின் திடீர் இறப்புக்கு காரணமாக அமையலாம் என தெரியவந்துள்ளது.

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040