
அவர்கள் நடத்திய ஆய்வில் காற்றோட்டமான மற்றும் காற்றோட்டமன்ற இடங்களில் தூங்கிய குழந்தைகளிடம் ஏற்பட்ட திடீர் இறப்பு விகிதத்தை ஒப்பிட்டுப்பார்த்தனர். அதில் காற்றோட்ட வசதியுடைய இடங்கள் 72 விழுக்காடு ஆபத்தை குறைப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு 11 நாடுகளை சேர்ந்த 497 குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.
குழந்தைகள் திடீரென இறப்பது என்பது குழந்தை பிறந்த முதலாண்டில், குறிப்பாக முதல் ஆறுதிங்களில் நடைபெறுவது மிக அதிகம். அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2500 குழந்தைகள் திடீரென இறந்து விடுவதாக, இது தொடர்பான அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்றோட்ட வசதியை அதிகமாக்குவதன் மூலம் கரியமில வாயுவையும் பிற மோசமான வாயுக்களையும் காற்றோட்ட வசதி வெளியேற்றி விடுகிறது. அவ்வாறு செய்யாவிட்டால் இவ்வகை வாயுகள் குழந்தை சுவாசிப்பதற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.. பெதுவாக பார்த்தால் காற்றோட்டமில்லாத இடங்களில் வாழ்வது என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பாதிப்பையே ஏற்படுத்தும். சுருக்கமாக சொன்னால் காற்றோட்டமே உயிரோட்டமானது. நல்லது. 1 2
|