• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-01 17:42:11    
பார்வையற்றேர் எண்ணியல் நூலகம்

cri
பார்வையற்றேர் எண்ணியல் நூலகம்

உடல் சவால் கொண்ட மக்களும் சமூகத்திலுள்ள அனைவரோடும் இயல்பாக வாழும் வசதிகளை எல்லா நாடுகளும் பெருக்கி வருகின்றன. அதில் சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் அதிகம். அண்மையில் பார்வையற்றோர் இலவசமாக கேட்கும்விதமாக புத்தகங்கள், இசை, மற்றும் விரிவுரைகள் கொண்ட digital எனப்படும் எண்ணியல் நூலகம் ஒன்றை தலைநகர் பெய்ஜிங்கில் சீனா தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 200 புத்தகங்கள், 500 ஒலி நிகழ்ச்சிகள், 500 ஒளிப்படங்கள் விழிபுலனற்றோர் கேட்டு கற்றுக்கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் சீன பண்பாடு, மருந்துகள், நவீன இலக்கியம் மற்றும் அன்றாட வாழ்க்கை பற்றியவைகளாகும். ஒவ்வோர் ஆண்டும் 200 புத்தகங்கள், 30 ஒளிப்பட விரிவுரைகள், 500 ஒலி நிகழ்ச்சிகளை இத்தொகுதியில் சேர்த்து கொண்டே இருக்க திட்டமிடப்பட்டுள்ளது. 82.96 மில்லியன் உடல் சவால் கொண்ட சீனர்களில் 16.91 மில்லியன் பேர் விழிபுலனற்றோர் ஆவர். உடல் சவால் கொண்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சீனாவின் முயற்சிகளில் இந்த எண்ணியல் நூலக வசதியும் ஒன்றாகும்.

1 2