• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-01 17:42:11    
பார்வையற்றேர் எண்ணியல் நூலகம்

cri

உள்ளங்கள் ஒன்றாக இணையம்

எல்லா வகையான விளம்பரங்களும் இலவசமாக செய்யும் அளவுக்கு இணையதள வசதிகள் இன்று முன்னேறிவிட்டன. அவ்வாறு கொடுக்கப்பட்ட விளம்பரம் 81 வயதான Wu Jieqin யை மூன்று முடிச்சு போட உதவியுள்ளது. 58 வயதான Jiang Xiaohui யோடு நடைபெற்றுள்ள திருமணம் இணைய தொடர்பு வழியாக தோன்றுகின்ற காதலுக்கு வயது தடையல்ல என்பதை எண்பித்துள்ளது. ஓய்வு பெற்ற பேராசிரியர் Wu Jieqin முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். பத்தாண்டுகளுக்கு முன்னர் மணமுறிவு பெற்ற Wu Jieqin, மாணவர் ஒருவரின் உதவியுடன் மணமகள் தேடும் விளம்பரம் ஒன்றை சீன இணையதளத்தில் பதிவு செய்தார். அதற்கு 50 க்கு மேற்பட்டோர் பதிலளித்ததில் சிச்சுவான் மாநிலத்தின் ஓய்வு பெற்ற இருப்புப்பாதை துறை ஊழியரான Jiang Xiaohui யை சந்தித்த பிறகு தான் அனைத்தும் நேர்மறையாக நிகழ்ந்ததாக Wu குறிப்பிடுகி்ன்றார். தன்னைவிட 23 வயதிற்கு அதிகமான முதியவரை திருமணம் செய்ய, Jiang Xiaohui தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் இசைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


1 2