
உடல் பருமன் மற்றும் அதிக எடை குழந்தைகள் எதிர்நோக்கும் இன்னொரு பிரச்சனையாகும். குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள பல குழந்தைகள் உடல் பருமன் கொண்டவர்களாகவும், அதிக எடையுடையவர்களாகவும் மாறிவருவது பெற்றோர்களின் கவலையை அதிகரித்துள்ளது. உடல் பருமன் பல நாடுகளில் மாபெரும் அறைகூவலாக மாறிவருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கிலும், கலிபோர்னியாவிலும், உணவகங்கள் தங்களது உணவுப் பொருட்களின் மீது கலோரி அளவை குறிப்பிட வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது, தாங்கள் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவை தெரிந்துகொண்டு உடல் பருமனையும், அதிக உடல் எடையையும் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையே. ஆனால் மக்களின் உணவு நுகர்வு பழக்கவழக்கங்கள் மக்களின் உடல் பருமனை குறைக்கக்கூடிய வகையில் ஆழமாக துணைபுரிவது கடினம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் நலவாழ்வு, உடல் எடை பேணுதல் ஆகியவை தொடர்பான நல்ல புத்தகங்களை வாசிப்பதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்தினால், தேவையற்ற உடல் எடைகளையும், உடல் பருமனையும் அவர்கள் குறைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதை ஆய்வாளர்கள் அறியவந்துள்ளனர். அதாவது இது தொடர்பான புத்தகங்களை வாசிக்கும்போது உடல்நல வழிமுறைகளை அறியவந்து அவற்றை இயல்பாகவே செயல்படுத்த தொடங்கி விடுவதால் உடல் பருமனும் அதிக எடையும் குறைகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.
1 2
|