• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-21 09:18:03    
சின்ஜியங்கில் துவக்கப் பள்ளியை நிறுவிய முதியோர் Chen Chengfa

cri

முதியோர் Chen Chengfa மலேசியாவைச் சேர்ந்த ஒரு சீனராவார். அண்மையில் வட மேற்கு சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் Shi He Zi நகரில் அவர் நன்கொடை செய்து, சீன மற்றும் உய்கூர் இன மொழியில் பாடம் நடத்தும் 3 துவக்கப் பள்ளிகளை நிறுவியுள்ளார்.

2008ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் புதிய கல்விக் காலம் தொடங்கிய பின், Shi He Zi முதலாவது துவக்கப் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆக 3000க்கு மேற்பட்டோர், மகிழ்ச்சியுடன் புதிய கல்விக் கட்டிடத்துக்கு இடம் பெயர்ந்தனர். உய்கூர் இனத்தைச் சேர்ந்த 11 வயதான மாணவர் ஏல்கன் மகிழ்ச்சியோடு கூறியதாவது—

"இந்தக் கட்டிடம் மிகச் சிறப்பாக கட்டியமைக்கப்பட்டது. இங்கே கல்வி பயில விரும்புகின்றேன். தாத்தா Chen Chengfaவே, நன்கொடை வழங்கி இந்தப் பள்ளியை நிறுவிய உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். எதிர்காலத்தில் நான் முயற்சியுடன் கல்வி கற்பேன்" என்றார் அவர்.

மலேசியாவைச் சேர்ந்த சீனர் Chen Chengfa, நாட்டுப்பற்றுடன், 9 லட்சம் யுவானை நன்கொடையாக அளி்த்து, சின்ஜியாங்கின் Shi He Zi நகரில் 3 இரட்டை மொழி துவக்கப் பள்ளிகளை நிறுவினார். தொலைதூரத்திலுள்ள Shi He Zi நகரில் துவக்கப் பள்ளிகளை நிறுவியதற்கான காரணம் பற்றி 2005ஆம் ஆண்டு நவம்பர் திங்களிலிருந்து கூறலாம். அப்போது Shi He Zi நகரின் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் கமிட்டியின் செயலாளர் Gu Jinhua அம்மையார், சீனாவின் ஃபுஜியன் மாநிலத்து ஃபுச்சோ நகரில் அலுவல் பரிமாற்றக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒரு நாள், மலேசியாவைச் சேர்ந்த சீனர் திரு Chen Chengfa, சீனாவின் ஒதுக்குப்புறமான சிறுபான்மை தேசிய இன மாநிலம் அல்லது பிரதேசத்தில் இரட்டை மொழி துவக்கப் பள்ளியை நிறுவ நன்கொடையளிக்க விரும்புகிறார் என நண்பர் ஒருவரின் மூலம் அவருக்கு தெரிந்தது. சில நாட்களுக்குப் பின், Shi He Zi நகருக்குத் திரும்பிய அவர், இத்தகவலை உள்ளூர் கல்வித் துறை வாரியத்துக்கு தெரிவித்து, தொடர்பான பணியாளரை திரு Chenனுடன் தொடர்பு கொள்ளச் செய்தார். Shi He Zi நகரின் கல்வித் துறை வாரியம் உள்ளூர் கல்வி நிலைமை பற்றியும் தேவை பற்றியும் திரு Chenனுக்கு விரிவாக விளக்கியது.

1 2