
தொடர்பான நிலைமை பற்றி அறிந்து கொண்ட பின், இரட்டை மொழி துவக்கப் பள்ளியை நிறுவ நன்கொடையளிக்கும் தனது மன உறுதியை திரு Chen Chengfa வலுப்படுத்தினார். அண்மையில் தொலைபேசி மூலம் செய்தியாளருக்குப் பேட்டி அளித்த அவர் கூறியதாவது—
"மலேசியாவில் பிறந்த போதிலும், நான் சீனராகவே இருக்கின்றேன் என உணர்கின்றேன். எனது இளமைப் பருவத்தில் சீனா வறுமையாக இருந்தது. வெளிநாட்டில் வியாபாரம் செய்த போது நான் பாகுபாடுடன் நடத்தப்பட்டேன். சீனா வலிமை பெறப் பாடுபட வேண்டும் என நான் கருதினேன்" என்றார் அவர்.
அண்மையில், 3 துவக்கப் பள்ளிகள் முறையே கட்டிமுடிக்கப்பட்டன. புதிய கல்வி கட்டிடத்துக்கு இடம் பெயர்ந்த சில ஆசிரியர்களும் மாணவர்களும் தொலைபேசி மூலம் மலேசியாவிலுள்ள திரு Chen Chengfaனுக்கு நன்றியைத் தெரிவித்தனர். திரு Chen வாழ்த்துச் செய்தியை அவர்களுக்கு அனுப்பினார். சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களுக்கு மேலதிக நன்கொடையை வழங்கும் விருப்பத்தையும் அவர் மறக்காமல் தெரிவித்தார். 1 2
|