• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-12 18:47:55    
பைகளாகும் பால் அட்டைப் பெட்டிகள்

cri
பைகளாகும் பால் அட்டைப் பெட்டிகள்

Jiang Meigui அம்மையாரின் வீட்டில் நுழைந்தவுடன் அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட பலவகையான பைகளை காணலாம். அப்படி பைகளை சேகரித்து வைக்க அவர் பை வடிவமைப்பாளரல்ல. ஆனால் அட்டைப் பெட்டிகளை மறுசுழற்சி செய்கின்ற செயல்பாட்டாளராக இப்போது மாறியுள்ளார்.

55 வயதான Jiang Meigui சமூகத்திலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தொண்டாற்றும் அதிகாரியாக இருக்கிறார். Tetra Pak நிறுவனம் தனது நிறுவனத்தின் பால் அட்டைப் பெட்டிகள் மறுசுழற்சிக்காக வாங்கப்படும் என 2005 ஆம் ஆண்டு ஜூலை திங்களில் தெரிவித்தவுடன், Jiang Meigui வும் அவருடைய தோழிகளும் Tetra Pak நிறுவன பால் அட்டைப்பெட்டிகளை சேமிக்க தொடங்கினர். 3000 பெட்டிகளை சேமித்திருந்தபோது அந்நிறுவனம் மறுசுழற்சி திட்டத்தை கைவிட்டுவிட்டதாக அறியவந்தனர். சேமிக்கப்ட்டிருந்த பால் அட்டைப் பெட்டிகளை வைத்து என்ன செய்வதென்று அறியாது திகைத்தாலும், அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று குழந்தைகளுக்கு Jiang கற்றுக்கொடுத்தார். தொப்பிகள், காலணிகள், அழுக்கு படாமலிருக்க நெஞ்சில் மூடப்படுகின்ற துணிகள், தாள் செல்லிடப்பேசிகள் ஆகிய பொருட்களை அவர்கள் செய்தனர். அவையனைத்தும் அட்டையால் எளிதாக வடிவமைக்கப்பட்ட, நீர் புகாத, தேற்றத்திற்கு அழகான பொருட்களாக இருந்தன. குறிப்பாக குழந்தைகள் அதிகம் விரும்பும் படியாக அப்பொருட்கள் இருந்தன.

அதுமுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக Tetra Pak நிறுவன பால் அட்டைப்பெட்டிகளை சேமிக்கும் விதமாக ஓய்வுபெற்ற 50 பெண்களை Jiang Meigui ஏற்பாடு செய்தார். குடியிருப்பு மனசாட்சி குழு என்று தங்களை அழைத்து கொண்ட அவர்கள், இப்போது தங்களை மனையாள் பசுமை சங்கம் என்றழைக்கின்றனர். சீனாவில் நெகிழி பைகளுக்கு தடை விதிக்கப்பட்டபோது, Jiang Meigui பொருட்களை வாங்குவதற்கான பைகளை செய்ய துவங்கினார். ஜூன் திங்கள் நடைபெற்ற இன்டெல் சுற்றுச்சூழலுக்குகந்த படைப்பாற்றல் மிக்க போட்டியில் இவருடைய பைகள் தான் பரிசுகள் வெற்றன. தற்போது அட்டைப்பெட்டியால் செய்யப்பட்ட பைகள் புகழ்பெற்றுள்ளதோடு, அட்டைப்பெட்டிகளிலிருந்து பைகள் தயாரிப்பதை Jiang Meigui பிறருக்கு கற்று கொடுத்து வருகிறார்.

1 2