• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-26 14:38:49    
உயர்ந்தோர் பத்து

cri
உயர்ந்தோர் பத்து

2008 ஆம் ஆண்டு சீனாவுக்கு அதிக பங்களிப்பு செய்த 10 இளைஞர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் சீன மக்களின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு உழைத்து, சாதனைகள் புரிந்த இவர்களை நாட்டின் உயர்ந்த முன்னணி இளைஞர்களாக, அனைவருக்கும் எடுத்துக்காட்டுகளாக அறிவித்துள்ளனர். மொத்தமாக 30 இளைஞர்களின் பெயர்களிலிருந்து இந்த 10 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு 2009 ஜனவரி திங்கள் விருதுகள் வழங்கப்படவுள்ளது

முதலிடத்தை பெற்றுள்ள 32 வயதான திபெத்தின அஞ்சலக பெண் ஊழியர் Nyima Lamo தென் சீனாவின் யுன்னான் மாநிலத்தில் உள்ள மலைப்பாங்கான Deqin வட்டத்திற்கு கடிதங்களை வினியோகம் செய்கின்ற ஊழியராக பத்து ஆண்டுகளாக உழைத்து வருகிறார். சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த வட்டத்திற்கு, கடிதங்களை வினியோகிக்க பள்ளதாக்குகளையும், பனிபடந்த மலைகளையும் நடந்தே சென்று பணிபுரிகின்றார். சிலவேளையில் தனது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளிலும் இப்பணியை தொடர்ந்துள்ளார். கடிதங்கள் வழங்கப்படுவது மிகவும் தாமதமாகிவிடும் என்ற ஒரே காரணத்திற்காக ஒன்பது மாத கர்ப்பினியாக இருந்தபோதும் மகப்பேற்றுக்கான விடுமுறையை எடுத்துக்கொள்ளாமல் பணிபுரிந்திருக்கிறார். இதுவரை அவர் இரண்டு இலட்சம் கிலோமீட்டருக்கு மேல் நடந்தே பணிபுரிந்திருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக, Zhao Haiqing என்பவர் செய்துள்ள மனிதநேய பிறரன்புப் பணி எல்லா சீனர்களின் இதயங்களையும் நெகிழ செய்துள்ளது. சிச்சுவான் மாநிலத்தின் Beichuan வட்டம் மே திங்கள் 12 ஆம் நாள் ரிக்டர் அளவையில் 8 புள்ளியாக பதிவான கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டபோது Zhao Haiqing அங்கு கிராம அதிகாரியாக பணிபுரிந்தார். நிலநடுக்காதால் காயப்பட்டிருந்தாலும் இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்டிருந்த மக்களில் 67 பேரை உயிரோடு காப்பாற்றும் வகையில் அவர் கிராம மக்களை வழிநடத்தினார். அந்நிலநடுக்கத்தில் தனது மகன் மற்றும் பெற்றோர் உள்பட குடும்பத்தினர் 6 பேரை இழந்த துயரோடும் மீட்புதவி பணிபுரிந்து, காயமடைந்த 2,100 பேரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பவும் அவர் ஏற்பாடுகள் மேற்கொண்டார்.

உயர்ந்தோர் பத்து பேரில் ஒருவராக இடம்பெற்றுள்ளார் 38 வயதான Song Zhengyu. Long March ஏவுகனையின் வளர்ச்சியில் பங்களித்தமைக்காக அவர் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

1 2