• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-26 14:38:49    
உயர்ந்தோர் பத்து

cri

இழக்காத நம்பிக்கை

தொடர்ந்த முயற்சி வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இளம்பெண் Jessica Cox விளங்குகிறார். அமெரிக்காவின் Arizona மாநிலத்தின் Tucson னை சேர்ந்த Jessica Cox பிறவிலேயே இரண்டு கைகளின்றி பிறந்தவர். அவருக்கு ஏற்பட்ட இந்த உடல் சவால், வாழ்வில் முடியவே முடியாது என்று சொல்வதை நிறுத்த தான் உதவியுள்ளது. கால்களால் விமானம் ஓட்டி விமான ஓட்டிக்கான சான்றிதழை முதல் முறையாக பெறும் சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார். ஒரு காலால் கட்டுப்பாட்டு கருவிகளை இயக்கி, இன்னொரு காலால் விமானத்தை ஓட்டியுள்ள 25 வயதான Jessica Cox போட்டிக்காக விமான ஓட்டும் சான்றிதளை பெற்றுள்ளார். மென்ரக விளையாட்டுப் போட்டி விமானங்களில் 10,000 அடி உயரத்திற்குள், பறக்கும் தகுதியை இதன் மூலம் அவர் அடைந்துள்ளார். கைகளின்றி பிறந்தாலும், பெண் விமானி என்ற சாதனையை தனது இறக்கையாக்கியுள்ளார் இவர்.


1 2