• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-24 12:04:37    
செஞ்சீனம்

cri
செஞ்சீனம்

கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்

எல்லா சிவப்பும் உந்தன் கோவம்....

இந்த வரிகள் பச்சை நிறமே என்று தொடங்கும் ஒரு திரைப்படப் பாடலில் இடம்பெறுபவை. காதலியின் அழகை நிறங்களைக் கொண்டு அழகாக வர்ணிக்கும் ஒரு காதலனின் ரம்யமான ரசனையான சிந்தனையை அந்தப் பாடல் வெளிப்படுத்தும். பச்சை வயல்வெளி, நீலக்கடல், மஞ்சள் வெயில், சாயும் முன் செந்தூரமாய் சிவப்பில் சிரித்து விடை சொல்லும் சூரியன் என நம்மை சுற்றி பல நிறங்கள் பல விதங்களில் எங்கெங்கும் காணப்படுகின்றன. கறுப்பும் வெள்ளையுமாய் காட்சியளிக்கும் நம் கண்விழிகளும், மணிகளும் காணும் காட்சிகளில்தான் எத்தனை வண்ணங்கள்.

ஆனால் சீனாவுக்கு வந்து போனவர்களுக்கு ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும். சீனாவில் எங்கு பார்த்தாலும் செந்நிறமும், மஞ்சள் அல்லது பொன்னிறமும் காணப்படும். சிவப்புக்கும், சீனாவுக்கும் அப்படியென்ன உறவு என்று நம்மை கேட்கத்தூண்டும் அளவுக்கு பொருட்கள், அலங்காரங்கள் ஏன் மக்கள் அணியும் ஆடைகள் என பார்க்கும் எல்லா இடத்திலும் செந்நிறம். செந்நிற விளக்குகள், அரண்மனைகளின் செந்நிறச் சுவர்கள், செந்நிற அலங்காரப் பொருட்கள் என்று தலைநகரான பெய்ஜிங்கில் சிவப்பு வண்ணம் ஏகோபித்து காணப்படும்.

உலகில் வேறு எந்த நாட்டிலும், எந்த ஒரு நிறத்துக்கும் இப்படியான ஒரு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதை நாம் காண இயலாது. செந்நிறம் சீன நாட்டின் ஆன்மாவுக்கு வண்ணம் கொடுக்கும் ஓர் அடையாளமாக திகழ்கிறது. பண்டைக்காலத்தில் செந்நிறம் கண்ணியத்துக்கும், மர்மமான தன்மைக்கு அடையாளமாக இருந்தது. செந்நிறத்தை இன்றளவும் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை விட பெரிதும் மதிக்கவே செய்கிறார்கள் எனலாம்.

சீனர்களுக்கு செந்நிறம் பிடிக்க அதன் சுண்டியிழுக்கும் தன்மை மட்டுமே காரணம் என்று நினைக்காதீர்கள். சீனர்களின் செந்நிறம் மீதான பற்றுக்கு பண்பாட்டு ரீதியான மற்றும் வரலாற்று ரீதியான காரணங்கள் உண்டு என்கிறார்கள்.

சீனாவில் பாரம்பரியமாக செந்நிறத்திலுள்ளவை சீனப் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளதை காணமுடியும். எடுத்துக்காட்டாக பண்டையா மாளிகைகள், அரண்மனைகளின் சுவர்களெல்லாம் செந்நிறத்திலேயே காணப்படுகின்றன. சீனாவின் தேசியக்கொடியும் சிவப்பே. சீனாவில் மிகவும் பிரபல கலைப்பொருட்களாக, கலைகளாக கருதப்படும் பின்னல் மற்றும் காகிதக்கத்தரிப்பு பொருட்கள் செந்நிறத்திலேயே காணப்படுகின்றன. வசந்தவிழா காலத்தில் வீட்டின் நுழைவாயிலில் செந்நிற காகிதத்தில் இரண்டு முறை எழுதப்படும் ஒற்றை அசைகள் அடங்கிய காகிதங்களும் சிவப்பே. அவ்வளவு ஏன் சிறியோரும் பெரியோருமாக விரும்பி சுவைக்கும் குச்சி பழம் என்று மகள் கூட அழைக்கும் குச்சியில் சொருகிய ஹாத்தோர்ன் பழங்கள் மற்றும் அதன் மேல் சர்க்கரை பாகு பூசப்பட்ட தாங்ஹூலூ கூட செந்நிறத்தில்தான் காணப்படுகிறது.

மங்கலத்தை, ஒன்றிணைப்பை, நலத்தை, மகிழ்ச்சியை, இணக்கத்தை, அமைதி மற்றும் செழுமையை அடையாளப்படுத்தும் நிறம் சிவப்பு. நிறங்களின் தன்மையை வைத்து குளிர்ச்சியானவை, வெப்பமானவை என்று அறிவியலாளர்கள் அவற்றை பிரிக்கின்றனர். சிவப்பு, ஆரஞ்சு, காவி, மஞ்சள் முதலியவை வெப்ப நிறங்கள். நீலம், பச்சை முதலியவை குளிர்ச்சியானவை. வெறுமனே நிறமாக இருந்தால், அறிவியலாளர்கள் சொல்லும் அவற்றின் இயல்பான தன்மை மட்டுமே நிறங்களுக்கு இருக்கும்.

ஆனால் அந்த நிறங்கள் மக்களோடு, மக்களின் வாழ்வோடு, நிகழ்வுகளோடு இயைந்து கலந்து பார்க்கப்படும்போது அவை பொருளுள்ளவையாக, குறிப்பிட்ட பண்பு நலனோடு தொடர்புடையவையாக தெரிகின்றன.

சீனாவில் சிவப்பு ஒரு வித வினோதமான ஈர்ப்புடன் பார்ப்பவர்களின் கண்களை சுண்டியிழுத்து, சீனப் பண்பாட்டின் செழுமையை சுவைக்க நம்மை அழைக்கின்றது. அவற்றில் சிலவற்றை உங்களுக்கு அறியத்தருகிறோம்.

1 2