• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-24 12:04:37    
செஞ்சீனம்

cri

சீன செந்நிற பின்னல் (ச்சுங்குவோ ஜியே)

பின்னல் என்றதும் தலையில் சிகையை அழகாக பின்னிக்கொள்ளும் கலை என்று எண்ணவேண்டாம். நூலால் அழகான முடிச்சுகள் பின்னி பார்க்க அழகான தொங்கல்கள் போல் காணப்படும் இவை அந்தக்காலம் முதலே அலங்காரப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சீனப் பின்னல் கலை ஒரு வித பண்டைய நெசவுக்கலையாகும். கிமு 206 முதல் 220 வரையான ஹான் வம்சக் காலத்திலேயே சீனாவில் இந்த பின்னல்கலை இருந்து வந்துள்ளது. இந்த செந்நிறப் பின்னல்களின் நுட்பத்தையும், நேர்த்தியான கலையம்சத்தையும் இன்றைக்கும் சீனர்களும் சரி, சீனாவுக்கு வரும் வெளிநாட்டினரும் சரி வியப்பும், மனக்கிளர்ச்சியும் அடையத்தான் செய்கிறார்கள். முடிச்சு என்பதன் சீன மொழிச் சொல்லுக்கு ஒன்றிணைதல், நட்பு, திருமணம், நேசம் என பல பொருள்கள் உண்டு. ஆக செந்நிற பின்னல்கள் ஒன்றிணைதலின், இணக்கத்தின், அதிர்ஷ்டத்தின், அன்பின் அடையாளமாக மாறின. பாரம்பரியமாக இந்த பின்னல்கள் ஒற்றை நூலில் பின்னப்படுகின்றன. மடித்து வளைத்து முடிச்சுகள் பல போட்டு ஒரு குறிப்பிட்ட வடிவமாக பின்னப்படும் இவை, ஒற்றை நூலிழையை கொண்டு பின்னப்படுவது முடிவில்லாத மகிழ்ச்சி கொண்ட வாழ்க்கையை உணர்த்துகிறது.


1 2