• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-25 11:18:16    
உலக பல்கலைக்கழக மாணவர் 24வது குளிர்கால விளையாட்டுப் போட்டி

cri

உலக பல்கலைக்கழக மாணவர் 24வது குளிர்கால விளையாட்டுப் போட்டி 18ம் நாளிரவு சீனாவின் வட கிழக்கு பகுதியிலுள்ள பனி நகரான ஹார் பினில் துவங்கியது. சீன அரசவை உறுப்பினர் Liu Yandong அம்மையார், சர்வதேச பல்கலைக்கழக மாணவர் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் Killian ஆகியோர் துவக்கவிழாவில் கலந்துகொண்டனர்.

சீன அரசும் ஒருங்கிணைப்புக் குழுவும் ஹார் பினில் மேற்கொண்ட உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை துவக்க விழாவில் Killian வெகுவாகப் பாராட்டினார். அத்துடன், சீனா, உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் பணிகளுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறியதாவது:

உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டி, சர்வதேச பல்கலைக்கழக மாணவர் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய பல்வகை சாம்பியன் போட்டிகள் மற்றும் கூட்டங்களை நடத்திய நாடுகளில் சீனா ஒன்றாகும். இதற்கு, சீன பல்கலைக்கழக மாணவர் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் Zhang Xinshengஉக்கு நன்றி தெரிவிக்கின்றைன் என்றார் அவர்.

இதைத் தொடர்ந்து, சீன அரசவை உறுப்பினர் Liu Yandong அம்மையார் இந்த உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டி துவங்குவதை அறிவித்தார். அவர் கூறியதாவது:

ஹார் பின் உலக பல்கலைக்கழக மாணவர் 24வது குளிர்கால விளையாட்டுப் போட்டி துவங்குகின்றது என்று கூறி தொடங்கி வைத்தார்.

1 2