• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 09:26:13    
சிவப்பு விளக்கு (ஹுங் தெங்லுங்)

cri
சிவப்பு விளக்கு (ஹுங் தெங்லுங்)

சீன மக்களின் வாழ்க்கையோடு ஒன்று கலந்தவை இந்த விளக்குகள். பொதுவாக நம்மூரில் ஹரிக்கேன் விளக்கு, லாந்தர் விளக்கு என நாம் அழைக்கும் விளக்குகளை போல் இவை, தொங்கு விளக்குகள். இப்போது விழாக்காலங்களில் மிக அழகான இந்த செந்நிற விளக்குகள் எங்கெங்கும் தொங்குவதை காணமுடியும். வீடுகளின் வெளியே தொங்கும் இந்த செந்நிற விளக்குகள் வீதிகளுக்கு தனி அழகை தரும். பெய்ஜிங் போன்ற பெரு நகரங்களில் கூட செந்நிற தொங்கு விளக்குகள் ஓர் அலங்காரமாக ஆங்காங் தொங்கவிடப்பட்டு அழகு சேர்ப்பதை பெய்ஜிங் வந்து போனவர்கள் அறிவர்.

தியென் ஆன் மன் சதுக்கத்தில் காணப்படும் பிரம்மாண்ட விளக்கோ, தொலைவில் ஏழைக்குடிசையின் வாயில் காணப்படும் சிறு விளக்கோ, எதுவாயினும் செந்நிற விளக்குகள் மகிழ்ச்சியான, இன்பமான சூழலையே வெளிப்படுத்துகின்றன. செந்நிற தொங்கு விளக்குகளை பார்த்தாலே சீனாதானே நமக்கு நினைவுக்கு வரும். செந்நிறம் என்றாலே சீனாதான் நினைவுக்கு வரும் என்று நம்மில் பலர் இப்போது சொல்வது புரிகிறது.

கெட்ட ஆவிகளை விரட்டி, அதிர்ஷ்டத்தை அடையாளப்படுத்தும் செந்நிர ஒளியால் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கக்கூடியதாக கருதப்படும் இந்த செந்நிற விளக்குகள் பாரம்பரிய சீன விழாக்களில் ஒதுக்கப்பட முடியாத ஒரு அம்சமாக அமைந்துள்ளது.

1 2