• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-04 08:41:06    
நிழற்படக் கலைஞர் Wang Shui Lin அ

cri

Wang Shui Lin கூறியதாவது:

"யுன்னான் மாநிலத்தில் நிழற்படங்கள் எடுக்கக்கூடிய வளமான காட்சிகள் அதிகமுண்டு. இங்குள்ள இயற்கைக் காட்சிகள் அழகானவை. பலதரப்பட்ட காலநிலை இருக்கிறது. மட்டுமல்ல அதிக சிறுபான்மை தேசிய இனத்தோர் இங்கு வாழ்கின்றனர்" என்று அவர் கூறினார்.

யுன்னான் முழுவதிலும் Wang Shui Lin பயணம் மேற்கொண்டிருக்கின்றார். வேறு நிழற்படக் கலைஞர்கள் படம் எடுக்காத இயற்கைக் காட்சிகளை படம்பிடிக்கும் பொருட்டு, மனித நடமாட்டமில்லாத பிரதேசங்களுக்கு அவர் துணிந்து சென்றார். குறுகிய சில ஆண்டுகளுக்குள், இயற்கைக் காட்சிகள் பற்றிய தனது சிறப்பு மிக்க உணர்வைக் கொண்டு, ஒளி மற்றும் நிழல் மாற்றம், நிறம், நிழற்படத்தின் உள்ளடக்கம் முதலியவற்றில் தமது படைப்புகளின் மேம்பாட்டினால், அவர் 158 உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது 486 படைப்புகள், சீனாவின் புகழ் பெற்ற இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. 2003ஆம் ஆண்டு, சீன நிழற்பட சங்கம், சீனாவின் தலைசிறந்த நிழற்படக் கலைஞர் என்ற புகழை அவருக்கு வழங்கியது. 2006ஆம் ஆண்டு, அவரது நிழற்படப் படைப்புகள், 5 ஐரோப்பிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

Wang Shui Linவின் நிழற்படங்களைக் காணும் மக்கள், அழகான யுன்னான் இயற்கைக் காட்சிகளால் ஆழமாக ஈர்க்கப்படுகின்றனர். Wang Shui Linஐப் பொறுத்த வரை, தங்களது கடின உழைப்புகளை எடுத்துக்கூறும் சில கதைகள் அவரது மனதில் ஆழப் பதிந்திருக்கின்றன.

1 2 3