• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-04 08:41:06    
நிழற்படக் கலைஞர் Wang Shui Lin அ

cri

2007ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கு முந்தைய நாளிரவு, Bi ta hai இயற்கைக் காட்சி மண்டலத்தில், எழில் மிக்க பனிப்பொழிவின் காட்சிகளை நிழற்படம் எடுக்கும் பொருட்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3950 மீட்டர் உயரமுள்ள மலையில் Wang Shui Lin தனது காரை நிறுத்தி, சூரிய உதயத்துக்காகக் காத்திருந்தார். அவர் கூறியதாவது:

"அன்றிரவு தட்பவெப்ப நிலை பூஜியத்துக்கு கீழ் 20 திகிரி செல்சியஸ். கடும் பனி பெய்தது. காரில் இரவை கழித்தால்தான், அடுத்த நாள் விடியற்காலை சூரிய உதயத்தின் காட்சிகளை நிழற்படம் எடுக்க முடியும் என்று நினைத்தேன். நான் உறங்கப்போகும் வேளையில், ஒருவர் எனது காரின் சன்னலில் தட்டியதைக் கேட்டேன். அவர் உள்ளூர் பிரதேசத்தில் வாழும் யீ இனப் பெண் ஆவார். அவர் ஊனமுற்றோர். 'ஐயா! எனது கூடாரத்துக்கு வாருங்கள். நீங்கள் காரில் உறங்கினால், இரவில் கடும் குளிரால் உயிருக்கு ஆபத்து'என்று அவர் எனக்கு கூறினார். அவரது உளமார்ந்த கரிசனை, எனது உயிரைக் காப்பாற்றியது" என்றார், அவர்.


1 2 3