• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 10:38:07    
குட்டித் தூக்கம் ஆ

cri

தடைப்படுகின்ற தூக்கம் மூளையில் நினைவை பதிவு செய்கின்ற புதிய உயிரணுக்களை பாதிக்கிறது. இதுவே அக்காலத்தில் நடைபெறுகின்ற அனைத்தையும் மறக்க செய்கிறது என்று லாஸ்ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவர் Dennis McGinty எச்சரிக்கிறார். இதனை அவர் சோதனை எலிகள் மூலம் ஆய்வு செய்தார். மூளை கண்காணிப்பு கருவியோடு இணைக்கப்பட்ட எலிகளை Treadmill எனப்படும் ஓடுபொறியில் அவர் தூங்க வைத்தார். அந்த சோதனை எலிகள் 30 வினாடிகள் தூக்கம் பெற்றதை கண்காணிப்பு கருவியில் பார்த்தவுடன் ஓடுபொறியை மெதுவாக ஓட வைத்தார். இவ்வாறு 12 நாட்களாக தடைபட்ட தூக்கத்தை தான் அந்த எலிகள் பெற்றன. பின்னர் அவற்றை 2 வாரங்கள் நீண்டநேரம் தூங்க வைத்தார். இதற்கு பிறகு அவைகளின் செயல்பாடுகள் ஆராயப்பட்டன. 12 நாட்கள் தடைப்பட்ட தூக்கமும், 2 வாரங்கள் நீண்டநேரமும் தூங்கிய எலிகள், தாங்கள் தப்பி செல்வதற்கான வழிமுறைகளை சரியாக நிறைவேற்றாமல் திண்டாடின. ஆனால் அவற்றை தவிர தொடர்ந்து தடையின்றி தூங்கிய பிற எலிகள் தாங்கள் தப்பி செல்வதற்கான வழிமுறைகளில் வெற்றி பெற்றன.

இரவு பல மணிநேரங்கள் தொடர்ந்து விழித்திருந்து வேலைகளை முடிக்கின்ற பலர் நம்மிடம் உண்டு. அவ்வாறு செய்தால் நம்முடைய பிந்தைய செயல்பாடுகள் பாதிக்கப்படுவதை இந்த ஆய்வு தெளிவாக விளக்குகிறது. தூக்கமின்மை ஏற்படுத்தும் பாதிப்புக்கள் பற்றி பல ஆய்வுகள் இருந்தாலும் தூக்கமில்லாமை நினைவாற்றலை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்று அறுதியிட்டு சொல்வதற்கில்லை. அது நபருக்கு நபர் மாறுபடுகிறது. தூக்கம் வரவில்லை என்றால் விரைவாக சிகிச்சை பெற வேண்டும். இல்லாவிட்டால் உடலளவில் பல மேசமான விளைவுகளை எற்படுத்தும். குட்டித் தூக்கம் போடுவதால் உடலுக்கு நன்மையும், அதிக பயனுமென்றால் மதிய வேளையில் குட்டித் தூக்கம் போட்டு நினைவாற்றலை வளர்த்து கொள்ளுங்கள்.


1 2 3