 தற்போது, அறிவியலாளர்கள் ஒருவர் தூங்குகின்ற நேர அளவைவிட அதன் ஆழ்ந்த நிலையை தான் அதிகமாக ஆய்வு செய்கின்றனர். தூங்குகின்றபோது, நாம் மிகவும் ஆழ்ந்த தூக்கம் பெற வேண்டும் அத்தகைய ஆழ்நிலை தூக்கத்தால் தான் நினைவாற்றலை தக்க வைத்து கொள்ள முடியும். இப்படிப்பட்ட ஆழ்நிலையை குட்டித்தூக்கமும் அளிக்கலாம் என்றும், குட்டித் தூக்கத்திற்கு பின்னர் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு புதிய தீர்வுகளை காணமுடியும் என்றும் நியூயார்க் நகர பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் மருத்துவர் William Fishbein நம்புகிறார். இது தொடர்பான ஆய்வில் ஆங்கிலம் பேச தெரிந்த 20 இளைஞர்களை தேர்ந்தெடுத்து சகோதரி, அம்மா, வேலைக்காரி என்ற இரண்டு அசை சீன சொற்களை கற்றுக்கொள்ள செய்தார். பின்பு இந்த இளைஞர்களில் பாதிபேர் குட்டித் தூக்கம் பெற அனுமதிக்கப்ட்டனர். கனவில்லா ஆழ்ந்த தூக்கமே நல்ல நினைவாற்றலை தந்து சுறுசுறுப்பாக இயங்க செய்யும் என்பதால், கனவு காண்கின்ற விரைவு விழியசைவு தூக்க நிலைக்கு போகாதவாறு அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். எழுந்தவுடன் பல சோதனைகள் அவர்களிடம் நடத்தப்பட்டன. குட்டி தூக்கம் போட்டவர்கள் கற்றுக்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டியதை கண்ணுற்றனர். 1 2 3
|